சென்னை:
மணிப்பூரில் கிறித்தவர்கள் கடுமையாக தாக்கப்படுவதையும், தேவாலயங்கள் உடைத்து எரிக்கப்படுவதையும் கட்டுப்படுத்த தவறிய மணிப்பூர் மாநில அரசையும், ஒன்றிய அரசையும் கண்டித்து கிருத்தவ மக்கள் களம், -கிறிஸ்தவ மக்கள் கழகம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கிறித்தவ மக்கள் கழகத்தின் நிறுவனர் ஜே. மா.மைக்கேல் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைªற்றது. எஸ்.பி.ராஜ், சென்னை லுத்தரன் வரவேற்றார்.
கிறிஸ்தவ மக்கள் கழகம் இளையோர் பிரிவு சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வினோத், மணிப்பூர் இனப்படுகொலையில் பலியான அப்பாவி கிறிஸ்தவர்கள், மேற்கு வங்கத்தில் மாநகராட்சி தேர்தலில் ஏற்பட்ட வன்முறையில் மரணமடைந்த 14 பேர்கள், கோவை மாநகர டிஐஜி விஜயகுமார் மரணத்திற்கும், கிறிஸ்தவ போதகர் ஆவடி தாமஸ் ராஜ், ரயில் நிலையத்தில் இறந்த கந்தன்சாவடி பகுதியை சார்ந்த இளம் பெண் பிரீத்தி ஆகியோருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
சென்னை லூத்தரன் கெர்சோன் ஜோசுவா. கிறிஸ்தவ மக்கள் கழக மாநில மகளிர் ஒருங்கிணைப்பாளர் உமா எப்சிபா, வெண்மதி ஸ்டீபன் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
அறநெறி மக்கள் கட்சி நிறுவனர் விசவனூர் தளபதி, சமூக நீதி பேரவை தலைவர் பால்ராஜ் குணா, கிறிஸ்தவ மக்கள் கழக தலைவர் ஆர்.கே., ஏ.ஐ.ஜே.எம்.கே. தலைவர் வி.சாலமோன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினர். கிறித்தவ மக்கள் களத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் பே.பெலிக்ஸ் சிறப்புரை ஆற்றினார். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
மணிப்பூர் உயிரை இழந்த அனைத்து மக்களின் குடும்பத்திற்கும் ரூ.1 கோடி நிவாரணம் அளிக்க வேண்டும். இடித்து சேதப்படுத்தப்பட்ட வீடுகள், தேவாலயங்களை மாநில அரசு கட்டித்தர வேண்டும். மத்திய அரசும், மணிப்பூர் மாநில அரசும் அனைத்து கட்சி சார்பில் அமைதிக்கான குழு அமைக்க வேண்டும். நிவாரண முகாம்களில் வாழும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்ப்படுத்தித் தர வேண்டும் என்று வலியுறுத்தி கோசங்கள் எழுப்பப்பட்டது. இறுதியாக சி.எஸ்.ஐ. அவை சார்பில் ஹெரால்டு பிரபாகர் நன்றி கூறினார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்து கடவுளை வாழ்த்துதல் குறள் 7: தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்






