நைஜீரியாவில் எண்ணெய் டேஙகர் வெடித்து தீ விபத்து; 20 பேர் பலி

நைஜீரியா:
நைஜீரியாவில் ஒண்டோ மாகாணத்தில் எண்ணை டேங்கர் ஒன்று வெடித்ததால் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 20 உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில் நைஜீரியாவும் ஒன்று. நைஜீரியாவில் நாள் ஒன்றுக்கு சுமார் 2 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. நைஜீரியா நாட்டிலிருந்து கச்சா எண்ணெய் உலக நாடுகள் பலவற்றிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில், ஒண்டோ மாகாணத்தில் இன்று எண்ணெய் டேங்கர் ஒன்று வெடித்ததில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 3 குழந்தைகள், 1 கர்ப்பிணி உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளதாக அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த தீ விபத்தால், லாகோஸ்-பெனின் விரைவுச் சாலை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அந்தச் சாலையைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். டேங்கர் வெடித்துச் சிதறிய விபத்தால், அப்பகுதி தீப்பிழம்புடன் காட்சியளிக்கிறது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதே நேரத்தில், இதுபோன்ற எண்ணெய் டேங்கர்கள் வெடித்து விபத்துகள் ஏற்படுவதும் இங்கு அடிக்கடி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்