அண்மை செய்தி

அறிவியல் திறன் என்பது வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான அடித்தளமாகும் : குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்

குடியரசுத் துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன், இன்று (09.07.2026) புவனேஸ்வரில் உள்ள தேசிய அறிவியல் கல்வி – ஆராய்ச்சி நிறுவனத்தின் 15-வது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றினார். இளம் விஞ்ஞானிகள் நேர்மை, சமூகப் பொறுப்பு ஆகிய உயர்ந்த தரங்களைக் கடைப்பிடித்து, தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காக அறிவியலையும் புத்தாக்கத்தையும் பயன்படுத்த வேண்டும் என்று அப்போது அவர் வலியுறுத்தினார்.

அறிவியல், புத்தாக்கம், அறிவுசார் தலைமைத்துவம் ஆகியவற்றில் இந்தியாவின் இலக்குகளை அடைவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் ஒரு நிறுவனமாக தேசிய அறிவியல் கல்வி – ஆராய்ச்சி நிறுவனம் திகழ்கிறது என்று அவர் கூறினார். அறிவியல் கல்விக்கும், ஆராய்ச்சிக்குமான ஒரு முதன்மை மையமாக இது உருவெடுத்துள்ளது என்றும், நாட்டிற்கு உயர் திறன்கொண்ட அறிவியல் பணியாளர்களை உருவாக்குவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அறிவியல் அறிவை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், கொள்கைகளுக்கு வழிகாட்டி, நிலைத்தன்மையையும் உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கூறினார். மக்கள்தொகை வலிமை கொண்ட இந்தியா போன்ற ஒரு நாட்டிற்கு, அறிவியல் திறன் என்பது ஒரு விருப்பத் தேர்வு அல்ல எனவும், 20047 ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற இலக்கை அடைவதற்கு அது அடித்தளமாக உள்ளது என்றும் அவர் கூறினார்.

இந்த விழாவில் ஒடிசா ஆளுநர் திரு ஹரி பாபு கம்பம்பதி, ஒடிசா முதலமைச்சர் திரு மோகன் சரண் மாஜி, மத்திய கல்வித்துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், மத்திய அறிவியல் – தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்,  மூத்த அதிகாரிகள், பேராசிரியர்கள், பட்டம் பெறும் மாணவர்கள், பெற்றோர், சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

உதவித்தொகையை உயர்த்தி வழங்க கோரி சைதாப்பேட்டையில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சென்னை:மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையை உடனே உயர்த்தி வழங்க வேண்டும். உதவித் தொகை கேட்டு விண்ணப்பித்து

தாம்பரம் தலைமை அரசு மருத்துவமனையில் மருந்து&மாத்திரை வழங்குவதில் காலதாதம்; கூடுதல் கவுன்டர்கள் திறக்கப்படுமா?

சென்னை: DAYA(A)) டாக்டர் அம்பேத்கர் இளைஞர் அரசியல் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை

கபடி வீராங்கணை கண்ணகிநகர் கர்த்திகாவிற்கு இந்திய அணியில் இடம் மறுத்தது ஏன?: தயா அமைப்பு கேள்வி

சென்னை:DAYA(A) டாக்டர் அம்பேத்கர் இளைஞர் அரசியல் அமைப்பு நிறுவன தலைவர் இரா.மு.அருண்குமார் வெளியிட்டுள்ள

ஊழல் பெருச்சாளிகளின் கூடாரமாக மாறுகிறதா தவெக?: சா.ரஜினிகாந்த்

சென்னை:விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் சா.ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-ஜென்சி

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட்டால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கும்: – தங்கம் தென்னரசு

சென்னை:பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் கைவிடப்படும் என்று முதல்வர்