ஆயுள் முடியும்2000 ரூபாய் நோட்டு… இரண்டு நாட்களே மீதி… கோயில்களில் உண்டியல் திறப்பு…

சென்னை:
பிரதமர் மோடி ஆட்சிப்பொறுப்பேற்ற போது ஊழலை ஒழிப்பதாக கூறி பழைய ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக புதிய நோட்டுகளை ரிசர்வ் வங்கி மூலம் அச்சடித்து புழக்கத்தில் விட்டார். அதன்படி ரூ.2000 தாளும் புழக்கத்தில் விடப்பட்டிருந்தது. ஆனால் ரூ.2 ஆயிரம் தாள் செல்லாதுஎன்று மத்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டது. நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் வருகிற 30-ந் தேதிக்குள் வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நோட்டுகளை மாற்றுவதற்காக அவகாசம் இன்னும் இரண்டு நாட்களே உள்ளன. அதன்படி அந்த நோட்டுகளை கையிருப்பில் வைத்திருப்பவர்கள் தங்கள் வங்கி கணக்கில் செலுத்தி மாற்றிக் கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு போக்குவரத்துக் கழகங்களில் 2000 ரூபாய் நோட்டுகளை இன்று முதல் வாங்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் சுமோட்டோ உள்ளிட்ட தனியார் உணவு நிறுவனங்களும் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்க மறுத்து வருகின்றன. கோவில்களில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் பணத்தையும் உடனடியாக எண்ணி அதில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் பணம் எண்ணும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்தது. இதில் மொத்தம் ரூ.5 கோடிக்கு மேல் வருவாய் கிடைத்துள்ளது. ரொக்கப்பணமாக ரூ.5 கோடியே 9 லட்சத்து 13 ஆயிரத்து 830ம், தங்கம் 1419 கிராமும், வெள்ளி 18,185 கிராமும், வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 1366-ம் கிடைத்துள்ளன. இது தவிர பட்டு, பரிவட்டம், நவதானியங்கள், வெளிநாட்டு கடிகாரம் உள்ளிட்ட பொருட்களும் காணிக்கையாக கிடைத்தன. காணிக்கையில் பக்தர்கள் வழங்கிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தும் பணியில் கோவில் நிர்வாகத்தினர் ஈடுபட்டனர்.
இதே போல் மாவட்டத்தில் உள்ள கோவில்களிலும் திருவிழாக்கள் மற்றும் கும்பாபிஷேகத்திற்கு முன்பே உண்டியல்கள் திறந்து எண்ணப்படுகிறது. 2000 ரூபாய் நோட்டுகளை இன்னும் 2 நாட்களில் மாற்றியாக வேண்டும் என்பதால் அங்குள்ள உண்டியல்களையும் திறந்து எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கிராமக் கோவில்கள் மற்றும் சமுதாயத்துக்கு பாத்தியப்படட குலதெய்வக் கோவில்களிலும் உண்டியல்கள் எண்ணும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 66 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 66

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’நகரின் மிகவும் எதிர்பார்க்கப்படும்

சட்ட உதவி தொடர்பான மண்டலப் பயிலரங்கம் தரம்சாலாவில் நாளை நடைபெறுகிறது

மத்திய அரசின் சட்டம்  அமைச்சகத்தின் நீதித் துறையால் செயல்படுத்தப்படும் மத்திய துறைத் திட்டமான திஷா திட்டம், சீர்திருத்த உற்சவம் ஆகியவற்றின் கீழ் ஒரு மண்டலப் பயிலரங்கு, நாளை (2026 ஜூன் 15) மதியம் 01:00 மணி முதல் இமாச்சலப் பிரதேசம் , காங்க்ரா, தரம்சாலாவில் உள்ள அரசு சட்டக் கல்லூரி கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நீதி கிடைப்பதை வலுப்படுத்துதல், சட்ட விழிப்புணர்வை ஊக்குவித்தல், கட்டணமில்லா சட்டச் சேவைகள், கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் நீதித்துறையில் மேற்கொள்ளப்பட்ட புரட்சிகரமான சீர்திருத்தங்கள் ஆகியவை தொடர்பான தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில், இமாச்சலப் பிரதேச ஆளுநர், இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஆகியோருடன், மத்திய சட்டத் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மெக்வால் கலந்துகொண்டு சிறப்பிப்பார்.அனைவருக்கும் நீதியை உறுதி செய்வதற்கான துறையின் தொடர்ச்சியான முயற்சிகள் இதில் எடுத்துரைக்கப்படும். மக்களின் அரசியலமைப்பு உரிமைகள், சட்ட உரிமைகள், பொறுப்புகள் ஆகியவை குறித்த புரிதலை ஆழப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சட்ட விழிப்புணர்வுப் பிரச்சாரமும் இந்நிகழ்ச்சியின் போது தொடங்கப்பட உள்ளது.

எங்களை ஏன் இந்த போருக்குள் இழுக்கிறீர்கள்?” -உயிர்பயத்துடன் இந்திய மாலுமிகள் வீடியோ வெளியீடு!

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65