இந்தியாவில் தீவிரவாத செயல் : பாகிஸ்தான் கும்பல் – கைதானவர் பரபரப்பு தகவல்

இந்தியா வழியாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக பெரும் அளவு போதை பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன. இதனை தடுக்க இந்திய கடற்படையும், மத்திய போதை பொருள் தடுப்பு துறையும் இணைந்து ஆபரேஷன் சமுத்திரகுப்த் என்ற பெயரில் தீவிர சோதனையில் இறங்கியது. இவர்கள், கொச்சி அருகே ரோந்து சென்றபோது சந்தேகத்திற்கு இடமாக ஒரு கப்பல் செல்வதை பார்த்தனர். அதனை நோக்கி விரைந்து சென்றபோது அந்த கப்பல் தண்ணீரில் மூழ்க தொடங்கியது. இருப்பினும் இந்திய கடற்படையும், மத்திய போதை பொருள் தடுப்பு துறை அதிகாரிகள் கப்பலுக்கு சென்று பார்த்தபோது அங்கு போதை பொருள் இருப்பது தெரியவந்தது. அவர்கள் கப்பலில் கடத்தி வரப்பட்ட 2,500 கிலோ மெத்தாம்பெட்டமைன் என்ற போதை பொருளை கைப்பற்றினர். மேலும் கப்பலில் இருந்த பாகிஸ்தானை சேர்ந்த ஒருவரையும் பிடித்தனர். தொடர்ந்து அவரை கொச்சி அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் அவரது பெயர் சுபைர் என தெரியவந்தது. இவர்கள், ரூ.25 ஆயிரம் கோடி மதிப்பிலான போதை பொருள் கொண்டு வந்ததாகவும், இந்திய அதிகாரிகளை கண்டதும் அதனை கடலில் மூழ்கடிப்பதற்காக கப்பலை சேதப்படுத்தி தண்ணீரில் மூழ்க செய்ததாகவும் தெரிவித்தார். மேலும் பல திடுக்கிடும் தகவல்களை அவர் தெரிவித்தார். ஆப்கானிஸ்தானில் இந்த போதை பொருள் தயாரித்து அங்கேயே பேக் செய்து வெளிநாடுகளுக்கு கடத்துவோம். தற்போது பாகிஸ்தானை சேர்ந்த கடத்தல் கும்பல் தலைவன் ஷாஜி சலீம் இந்த கடத்தலை தலைமை தாங்கி நடத்தி வருகிறார். இவர், பாகிஸ்தானிலேயே போதை பொருள்களை பாக்கெட்டுகளில் அடைத்து இலங்கை உள்பட பல நாடுகளுக்கு அனுப்பி வருகிறார். இந்த போதை கும்பல் இந்தியாவில் தீவிரவாத செயல்களுக்கு பெரும் அளவு பணம் உதவி செய்து வருவதாகவும் சுபைர் தெரிவித்துள்ளார். அவருடன் மேலும் சிலர் வந்ததாகவும், அவர்கள் படகுகளில் தப்பிச் சென்று விட்டதாகவும், சுபைர் கூறினார். போதை பொருள்கள் தண்ணீரில் நனையாமல் இருப்பதற்காக அனைத்து பாக்கெட்டுகளிலும் பிளாஸ்டிக் கவர் சுற்றப்பட்டிருப்பதாகவும் இந்திய அதிகாரிகள் அந்த பகுதியை விட்டு சென்ற பிறகு கடலில் மூழ்கடித்த போதை பொருள்களை மீட்கலாம் என திட்டமிட்டதாகவும் ஆனால் அதிகாரிகள் போதை பொருளை கைப்பற்றி விட்டனர் எனவும் தெரிவித்துள்ளார். அவர் கூறிய கருத்துக்கள் முன்னுக்குப் பின் முரணாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து சுபைரை கைது செய்து எர்ணாகுளம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். இந்தியாவில் தீவிரவாத செயல்களுக்கு போதை கும்பல் பண உதவி செய்வதாக சுபைர் கூறி உள்ளதால் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகளும் விசாரணை நடத்த உள்ளனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 66 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 66

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’நகரின் மிகவும் எதிர்பார்க்கப்படும்

சட்ட உதவி தொடர்பான மண்டலப் பயிலரங்கம் தரம்சாலாவில் நாளை நடைபெறுகிறது

மத்திய அரசின் சட்டம்  அமைச்சகத்தின் நீதித் துறையால் செயல்படுத்தப்படும் மத்திய துறைத் திட்டமான திஷா திட்டம், சீர்திருத்த உற்சவம் ஆகியவற்றின் கீழ் ஒரு மண்டலப் பயிலரங்கு, நாளை (2026 ஜூன் 15) மதியம் 01:00 மணி முதல் இமாச்சலப் பிரதேசம் , காங்க்ரா, தரம்சாலாவில் உள்ள அரசு சட்டக் கல்லூரி கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நீதி கிடைப்பதை வலுப்படுத்துதல், சட்ட விழிப்புணர்வை ஊக்குவித்தல், கட்டணமில்லா சட்டச் சேவைகள், கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் நீதித்துறையில் மேற்கொள்ளப்பட்ட புரட்சிகரமான சீர்திருத்தங்கள் ஆகியவை தொடர்பான தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில், இமாச்சலப் பிரதேச ஆளுநர், இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஆகியோருடன், மத்திய சட்டத் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மெக்வால் கலந்துகொண்டு சிறப்பிப்பார்.அனைவருக்கும் நீதியை உறுதி செய்வதற்கான துறையின் தொடர்ச்சியான முயற்சிகள் இதில் எடுத்துரைக்கப்படும். மக்களின் அரசியலமைப்பு உரிமைகள், சட்ட உரிமைகள், பொறுப்புகள் ஆகியவை குறித்த புரிதலை ஆழப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சட்ட விழிப்புணர்வுப் பிரச்சாரமும் இந்நிகழ்ச்சியின் போது தொடங்கப்பட உள்ளது.

எங்களை ஏன் இந்த போருக்குள் இழுக்கிறீர்கள்?” -உயிர்பயத்துடன் இந்திய மாலுமிகள் வீடியோ வெளியீடு!

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65