நாகர்கோயில், 11 செப்.2023:
கன்னியாகுமரி மாவட் டம் நித்திரவிளை பகுதி யில் உள்ள ஏலாக்கரை பகுதியில் வசித்து வருகின்ற மாணவன் கலைஇளமணி ஜோ.ஸ்.தீரஜ். இவர் விழிப்புணர்வு பாடகராகவும், உலகசாதனையாளராகவும் வலம்வந்து கொண்டிருக்கிறார். இவர் திருக்குறளை தனது சொந்த இசையுடன் வழங்கி புதிய உலக சாதனை படைத்துள்ளார். இது இவரது ஆறாவது உலக சாதனை ஆகும். இவரது இசை வடிவிலான திருக்குறளுக்கு ஜாக்கி புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. சிறுவயது முயற்சியை பாராட்டி கன்னியாகுமரி மாவட்ட கிள்ளியூர் சட்ட மன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற காங் கிரஸ் கட்சி துணைத் தலைவர் வழக்கறிஞர் ராஜேஷ் குமார் மாண வனை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்து பொன்னாடை அணிவித்து கேடயம் வழங்கி பாராட்டினார். இதேபோல் இவருக்கு உலக சாதனை கிடைத்ததை அறிந்த வேங்கோடு பெதனி நவ ஜீவன் சீனியர் செக்ண்டரி பள்ளியின் தாளாளர் அருட்பணி.ஜான் கிறிஸ் டோபர் தனது பள்ளியில் 9ம் வகுப்பு பயிலும் மாணவனை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். பள்ளியில் உள்ள ஆசிரியர்களும், மாணவர்களும் இவரை நேரில் வாழ்த்தினர். பள்ளி நிர்வாகம் பள்ளியின் உணவு இடைவேளையின் போது பெதனி எப் எம் (திவி) நிகழ்ச்சியில் இவரை திருக்குறளை பாடச்சொல்லி மீண்டும் பெருமைப்படுத்தி உள்ளனர்.