எஸ்.பி.ஐ. சென்னை தலைமையகத்தில் சுதந்திர தின விழா

சென்னை:
எஸ்.பி.ஐ. சென்னை உள்ளூர் தலைமையகம் லிபிளி வளாகத்தில் 80 வது சுதந்திர தின விழா தேசிய உணர்வு மற்றும் தேசப்பற்று மிக்க உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதில் தலைமை பொதுமேலாளர் விவேகானந்த் சோபே தேசியக் கொடியை ஏற்றி வைத்து, நமது நாட்டின் ஒற்றுமையையும், சுதந்திரத்தினையும் பற்றி சிறப்புரையாற்றினார்.
தலைமை பொதுமேலாளர் சுதந்திர தின உரையில் நாட்டின் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் எஸ்.பி.ஐ.யின் முக்கிய பங்கு மற்றும் அதன் அர்ப்பணிப்பையும் எடுத்துரைத்தார்.
தொடர்ந்து அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு பணியாளர்களான தேசத்திற்கு சேவை செய்து பெருமை சேர்த்த ஆயுதப்படைகளைச் சேர்ந்த முன்னாள் ராணுவத்தினர்களின் தன்னலமற்ற பணிக்காக பாராட்டு விழா நடத்தப்பட்டது.
இந்த விழாவில் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் பல்துறை திறமைகளை வெளிப்படுத்திய வண்ணமயமான கலாச்சார நிகழ்ச்சிகள் இடம்பெற்றது. இந்த விழாவில் எஸ்.பி.ஐ.-யின் மூத்த அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.

விஐடி நிறுவனர், மல்லை சத்யாவுக்கும் பைபிள் ஒளியில் திருக்குறள் அறத்துப்பால் விளக்க புத்தகம் வழங்கல்

சென்னை:வி.ஐ.டி. நிறுவன தலைவரும், முனைவருமான விசுவநாதனை இந்தியர் ஆன்மீக விடுதலை இயக்க தலைவர்