ஐடிசியின் ஃபீல் குட் வித் ஃபியாமா மனநல ஆய்வு 2023…!

79% இந்தியர்கள் திரைப்படங்களில் நேர்மறையான மனநலச் சித்தரிப்புகள் களங்கத்தை நிவர்த்தி செய்ய உதவும்
என்று நம்புகிறார்கள். 82% இந்தியர்கள் டிவி/ஓடிடி உள்ளடக்கம் மனநலம் பற்றிய பார்வையில் செல்வாக்கு செலுத்தும் என்று கருதுகின்றனர்.

இந்தியாவில், மனநலம் மற்றும் மன ஆரோக்கியம் குறித்த மனப்பான்மை படிப்படியாக அதிகரித்த விழிப்புணர்வு, களங்கத்தை குறைத்தல் ஆகியவற்றுக்கான உரையாடல்களுடன் உருவாகி வருகிறது. அதன் 3ஆம் ஆண்டு மனநல தினத்தில், ஐடிசியின் ஃபீல் குட் வித் ஃபியாமா மனநலம் பற்றிய ஆய்வு, மனநலம் மற்றும் மன ஆரோக்கியம் குறித்த இளம் இந்தியாவின் மாறிவரும் அணுகுமுறைகளை மேலும் புரிந்துகொள்ள சுவாரஸ்யமான உண்மைகளை வெளிப்படுத்துகிறது. ஜென்இசட் மற்றும் மில்லேனியல்ஸ் சேர்ந்தவர்களின் மனநலத்திற்கான நம்பிக்கைகள், நடத்தைகள், முக்கிய அழுத்தங்கள், மனஅழுத்தத்தை குறைத்தல் வரம்பு ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த ஆய்வை நீல்சன்ஐக்யூ சிறப்பாகச் செய்தது.

உலகின் பல பகுதிகளைப் போலவே, பண்பாட்டுத் தாக்கங்கள் மற்றும் நடத்தைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் சினிமா முக்கியப் பங்கு வகிக்கிறது. ஃபியாமா மனநலம் பற்றிய ஆய்வு, 2023-இல், சினிமாவில் மன ஆரோக்கியத்தை சிறப்பாகச் சித்தரிப்பது உணர்வுகளையும் உரையாடல்களையும் பாதிக்கும் என்று ஜென்இசட் மற்றும் மில்லேனியல்ஸ் சேர்ந்தவர்கள் நம்புவதாக ஃபீல் குட் வித் ஃபியாமா வெளிப்படுத்துகிறது. சமீபத்திய ஆண்டுகளில் மனநலம் என்பது ஒளிபரப்பு உள்ளடக்கத்தில் சில முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது மேலும் நேர்மறையான சித்தரிப்புகளை ஆராய வேண்டியதன் அவசியத்தை இந்த ஆய்வு எடுத்துக்காட்டுகிறது. இந்த ஆய்விற்கு பதிலளித்தவர்களில் 82% பேர், மனநலம் பற்றிய கருத்துக்களைப் பாதிக்கும் வகையில் டிவி/ஓடிடி கருவியாக இருக்கும் என்று கருதுகின்றனர். 77% டிவி/திரைப்படங்கள் மற்றும் ஓடிடி உள்ளடக்கம் மனநல உரையாடல்களை இயக்கும் என்று நம்புகின்றனர். மன ஆரோக்கியம் மற்றும் அன்றாட மன அழுத்தத்தைக் கையாள்வது பற்றிய செயலூக்கமான உரையாடல் ஒரு நேர்மறையான மாற்றத்தைக் கண்டாலும், பாப் கலாச்சாரக் குறிப்புகளில் அதைச் சிறப்பாக விளக்க வேண்டிய அவசியம் உள்ளது. 78% இந்தியர்கள் மனநலத்தின் ‘வியத்தகு’ பிரதிநிதித்துவம் மக்களை சிகிச்சை பெறுவதைத் தடுக்கலாம் என்றும் 79% திரைப்படங்களில் நேர்மறையான மனநல சித்தரிப்புகள் களங்கத்தை நிவர்த்தி செய்ய உதவும் என்று நம்புகிறார்கள். 81% பேர் மனநலத்திற்கு ஆதரவளிக்கும் பிரபலங்கள் வலுவான தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் கருதுகின்றனர்.

ஜென்இசட் அல்லது மில்லேனியல்ஸ் ஆக இருந்தாலும், ஒவ்வொருவரும் பல்வேறு காரணங்களால் மன அழுத்தத்துடன் போராடுகிறார்கள். வேலை, உறவுகள், மனநலம், மன நல்வாழ்வுக்கான ஒட்டுமொத்த அணுகுமுறைகள் ஆகியவற்றில் உள்ள பல்வேறு அழுத்தங்கள் மற்றும் மன அழுத்தத்தை குறைக்கும் காரணிகளை இந்த ஆய்வு முடிவுகள் எடுத்துக்காட்டுகின்றன.

இந்த ஆய்வின் முக்கிய அம்சங்கள்-
வேலை மற்றும் தொழில்சார்ந்த முடிவுகள்:-

வேலை அழுத்தம் மற்றும் தொழில் தொடர்பான முடிவுகள் இந்திய இளைஞர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் மற்றும் மனநலத்தை பாதிக்கும் காரணிகளில் முதலிடத்தில் உள்ளது. தொழில்சார்ந்த கவலையில் மில்லேனியல்களை ஜென் இசட் 18% விஞ்சுகிறார்கள். பணியிடத்தில் அழுத்தமாக இருக்கும் 10-இல் 9 இந்தியர்கள், சிறந்த வேலை வாழ்க்கை சமநிலைக் கொள்கைகளை மதிக்கிறார்கள். 62% பதிலளித்தவர்கள் உடல் உழைப்பை
மீண்டும் தொடங்குவதில் மன அழுத்தத்தை உணர்கிறார்கள். மனநலப் பிரச்சினைகள் தொடர்பான கவலைகளுக்கு 57%க்கும் அதிகமான ஜென்இசட் சேர்ந்தவர்கள் தொழில்சார்ந்த முடிவுகளைக் கூறுகின்றனர்.
42% இந்திய ஆண்கள் உடனடி தொழில்முறை உதவியை நாடுகிறார்கள் மற்றும் 35% ஆன்லைன் ஆலோசனையை தேர்வு செய்கிறார்கள். பெங்களூரில் இருந்து பதிலளித்தவர்களில் 53% பேர் மனநலம் தொடர்பான பிரச்சினைகள்
வேலையில் உள்ள உறவுகளையும் பாதிக்கும் என்று நம்புகிறார்கள்.

உறவுகள்
ஃபீல் குட் வித் ஃபியாமா மனநல ஆய்வு 2023 இவ்வாறு வெளிப்படுத்துகிறது, 38% இந்தியப் பெண்கள் மனநலத்தைப் பாதிக்கும் முக்கியக் காரணங்களில் மோசமான உறவுகளைக் காரணம் காட்டுகிறார்கள், மேலும் 64% இந்தியர்கள் சமூகத் தரநிலைகள் சோர்வுகளை ஏற்படுத்துவதாக நம்புகிறார்கள். 82% இந்தியர்கள் தாங்கள் சிகிச்சை பெறுவதற்கு தங்கள் பெற்றோர் ஆதரவாக இருப்பார்கள் என்று நம்புகிறார்கள். ஒருவர் சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டியிருந்தால் பெற்றோர்கள் நம்பிக்கைக்கு உரியவர்களாகக் கருதப்படுவதையும் இது பிரதிபலிக்கிறது. இருப்பினும், 29% இந்தியர்கள் மட்டுமே தங்கள் மனநலப் பயணத்தில் உடன்பிறந்தவர்களை நம்பிக்கைக்கு உரியவர்களாகக் கருதுகின்றனர்; கணவன் அல்லது மனைவி ஆதரவு 31% பேருக்கு ஓரளவு சிறப்பாக உள்ளது. 61% இந்தியர்கள் மனநலப் பிரச்சினைகளால் அன்புக்குரியவர்களுக்கு உதவ இயலாமையால்
உதவியற்றவர்களாக உணர்கிறார்கள்.

இந்தியாவில் உடல்நலம் மற்றும் ஆரோக்கியம்
பெரும்பாலான இந்தியர்கள் மனநல அறிகுறிகளைத் தவறவிடுகிறார்கள், தரவரிசையில் டெல்லி 85% உடன் முதலிடத்தில் உள்ளது. 72% இந்தியர்கள் மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட ஒருவரை அறிந்திருக்கிறார்கள்,
மேலும் மனச்சோர்வுடன் மோசமான மனநலத்துடன் உள்ள ஒருவருடன் தொடர்பு கொண்டிருக்கிறார்கள்.
86% மும்பைவாசிகள் சிகிச்சையை கடைசி முயற்சியாக தேர்வு செய்கிறார்கள் என்று இந்த ஆய்வு மேலும் வெளிப்படுத்துகிறது. ஒரு நேர்மறையான முன்னேற்றமான படியில், மனநலப் பிரச்சினைகள் வெட்கப்பட
வேண்டியவை அல்ல என்று 84% பேர் நம்புவதாகவும் இந்த ஆய்வு வெளிப்படுத்துகிறது. 54% இந்தியர்கள் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு மனநலம் முக்கியம் என்று கூறுகின்றனர். யோகா, தியானம், உடற்பயிற்சி மூலம் 58% பேர் மன அழுத்தத்தை எதிர்த்துப் போராடுகிறார்கள். ஒரு சுவாரஸ்யமான எடுத்துக்காட்டில், 67% இந்திய ஜென்இசட் மற்றும் 63% மில்லேனியல்கள் தங்கள் தலைமுறை சாதகமான வாய்ப்புகளை தவறவிடுவோமோ
என்ற கவலையில் இருந்து, தவறவிடுவதில் மகிழ்ச்சி (FOMO to Fun of Missing Out!) என்று மறுவரையறை செய்வதாக நம்புகிறார்கள்!

மனஅழுத்தம், அதிகரித்து வரும் பதட்டம் ஆகியவற்றுக்கு பல்வேறு காரணங்கள் இருந்தபோதிலும், சமூக ஊடகங்கள் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பும் 51% இந்தியர்கள் ஆன்லைன் ஆலோசனையை ஒரு சிகிச்சை விருப்பமாக மாற்றுகின்றனர். இளைஞர்கள் மனஅழுத்தத்தை நீக்குவதற்கான மாற்று வழிகளை ஆராய்ந்து வருகின்றனர் – 86% இந்தியர்களுக்கு மன அழுத்தம் மற்றும் எதிர்மறை சிந்தனைகளைச் சமாளிக்க இசையே விருப்பமான தேர்வாகும்.

இந்த ஆய்வு குறித்து ஐடிசி லிமிடெட் பர்சனல் கேர் புராடக்ட்ஸ் பிசினஸின் பிரதேச தலைமை நிர்வாகி சமீர் சத்பதி அவர்கள் இவ்வாறு பேசினார், “விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் கலந்துரையாடல்களின் படிப்படியான அதிகரிப்புடன் மனநலத்தைப் புரிந்துகொள்வதில் ஏற்பட்டுள்ள சில நேர்மறையான மாற்றங்களைக் காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஃபியாமா மனநல ஆய்வு, இந்தியாவின் இளைஞர்கள், மனநலம் மற்றும் நல்வாழ்வு குறித்த அவர்களின் அணுகுமுறை குறித்து தொடர்ந்து கவனத்தை ஈர்க்கிறது. அதன் 3வது பதிப்பில், இந்த ஆய்வு சில முக்கியமான உண்மைகளை வெளிப்படுத்துகிறது, அவை நிச்சயமாக மிகவும் பரவலான உரையாடல்களுக்கு ஒரு ஊக்கியாக இருக்கும், மேலும் இப்பிரச்சினை பற்றிய நுணுக்கமான புரிதல் மற்றும் மனநல ஆதரவை மேம்படுத்தும். மனநலத்தை மிகவும் செயலூக்கமுள்ள உரையாடலாக மாற்ற ஃபியாமாவின் முயற்சியானது சிந்தனையைத் தூண்டுவதைத் தாண்டியது. மைண்ட்ஸ் பவுணடேஷனுடன் இணைந்து, இது மானிய விலையிலான மெய்நிகர் சிகிச்சைக்கான அணுகலையும் செயல்படுத்துகிறது.” தி மைண்ட்ஸ் பவுண்டேஷனுடன் இணைந்து ஐடிவி ஃபியாமா தனது முதல் மெய்நிகர் கிளினிக்கையும் தொடங்கியுள்ளது.

இந்த மெய்நிகர் கிளினிக் உரிமம் பெற்ற நிபுணர்களால் வழங்கப்படும் மனநல சிகிச்சைக்கு மலிவுக் கட்டணத்தில் அணுகலை செயல்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது. சங்கடம் அல்லது நிலவும் களங்கம் பற்றிய பயம் இல்லாமல் ஒரு நெருக்கமான மெய்நிகர் இடத்தில் உதவி பெற தனிநபர்களை ஊக்குவிக்கும் பொருத்தமான தளம் இது. மைண்ட்ஸ் பவுண்டேஷன் மெய்நிகர் கிளினிக்கிற்கான உயர் தகுதிவாய்ந்த சிகிச்சையாளர்களின் குழுவை சிறப்பாக ஒன்றிணைத்துள்ளது, இதன் மூலம் ஒருவரின் சொந்த தனியுரிமையின் வசதிக்கேற்ப நிபுணர் ஆலோசனை, சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை வழங்குகிறது. ஒரு அமர்வுக்கு வெறும் இந்திய ரூ.300/- என்ற மலிவு கட்டணத்தில் மைண்ட்ஸ் பவுண்டேஷனின் தொழில்ரீதியாக தகுதிவாய்ந்த சிகிச்சையாளர் ஆலோசனைக்கு இங்கே பதிவு செய்யவும்.

*ஐடிசி ஃபீல் குட் வித் ஃபியாமா மனநல ஆய்வு 2023, டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர் ஆகிய இடங்களில் 16-45 வயதுக்குட்பட்ட 800 ஆண்கள் மற்றும் பெண்களைக் கொண்டு நடத்தப்பட்டது. 2023 செப்டம்பரில் நீல்சன்ஐக்யூ-ஆல் ஆய்வு நடத்தப்பட்டது.

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

ஐடிசியின் ஃபீல் குட் வித் ஃபியாமா மனநல ஆய்வு 2023…!

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை