காவிரி நீர் தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் 17 ஆம் தேதி விசாரணை

புதுடெல்லி:

காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் உத்தரவுகளின்படி, தமிழ்நாட்டிற்கான உரிய நீரை கர்நாடக அரசு திறக்காத நிலையில் முதலமைச்சர் ஜோசப் விஜயின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் அடங்கிய அமர்வின் முன்பு தாக்கல் செய்யப்பட்டது.
இதில் தமிழ்நாடு அரசு சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ் வைத்தியநாதன், இந்த மனுவை அவசர வழக்காக எடுத்துக் கொள்ள கோரிக்கை விடுத்தார். அதனையடுத்து, இந்த மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 13 எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதிகள் அமர்வு தெரிவித்தது. காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவில், காவிரி படுகையின் நீரியல், வானிலை சூழல் ஆகியவற்றை ஆய்வு செய்து, தமிழ்நாட்டிற்கு ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை விநாடிக்கு 3,500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. ஆனால் இதனை கர்நாடக அரசு மதிக்கவில்லை.
கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளிலிருந்து, ஆகஸ்ட் 12 ஆம் தேதிக்குள், வினாடிக்கு 3,500 கன அடி வீதம் மொத்தம் 4.536 டி.எம்.சி, தண்ணீரை திறந்துவிட்டு, அது பிலிகுண்டுலு எல்லையை வந்தடைவதை கர்நாடக அரசு உறுதி செய்ய உத்தரவிட வேண்டும். கர்நாடக அணைகளுக்கு வரும் நீரின் அளவை, ஒவ்வொரு 10 நாட்களுக்கு ஒரு முறை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் நேரடியாக கண்காணிக்க வேண்டும். பிலிகுண்டுலுவில் நீர்வரத்து இருப்பதை உறுதி செய்ய, கர்நாடகாவிற்கு தொடர்ந்து உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.” எனக் கோரப்பட்டது.
இந்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கோரி தமிழ்நாடு அரசின் சார்பில் மூத்த வக்கீல்கள் சி.எஸ்.வைத்தியநாதன், ஜி.உமாபதி ஆகியோர் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன்பு கடந்த 10 ஆம் தேதி முறையிட்டனர். இந்த முறையீட்டை ஏற்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே தி.மு.க விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன் சார்பில் தாக்கல் செய்துள்ள இடையீட்டு மனுவை விரைந்து விசாரிக்க கோரி மூத்த வக்கீல் பி.வில்சன் முறையீட்டை பரிசீலித்த தலைமை நீதிபதி, தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள மனுவுடன் சேர்த்து வருகிற 17 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

மதுரையை தாக்கும் வெப்பத்தீவு பாதிப்பு; ‘பசுமை மதுரை செயல் திட்டம்‘ தீட்ட நீதிமன்றத்தில் மனு

மதுரை:மதுரையில் அதிக வெப்ப அபாயம் உள்ளதாக ஆக்ஸ்போர்டு ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.. இந்நிலையில்,

மகன் இறப்பில் மர்மம், தனது படம் மார்பிங்… நீதி கேட்டு போராடும் பெண் செய்தியாளர்

சென்னை:நாளைய தீர்ப்பு செய்தியாளர் கயல்விழி அளித்துள்ள செய்தியில். கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து

கணக்கெடுப்புப் பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும்: – சென்னை மாநகராட்சி ஆணையாளர்

சென்னை:சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வீட்டுப்பட்டியல் கணக்கெடுப்புப் பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர

‘வந்தே மாதரம்’ சட்ட பாதுகாப்பு மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்: அவமதித்தால் 3 ஆண்டு சிறை

புதுடெல்லி:‘வந்தே மாதரம்’ என்ற தேசிய பாடலுக்கும் தேசிய கீதத்துக்கு சமமான சட்ட பாதுகாப்பு