“சமூக பொருளாதாரத்தில் தற்கொலைகளினால் ஏற்படும் தாக்கம்” தலைப்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிக்கை வெளியீடு

சென்னை:
மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை கிண்டி இந்திய தொழில்நுட்பகழகத்தில் “சமூக பொருளாதாரத்தில் தற்கொலைகளினால் ஏற்படும் தாக்கம்” எனும் தலைப்பில் அறிக்கையினை வெளியிட்டார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சென்னை, கிண்டி, இந்திய தொழில்நுட்பகழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் “சமூகபொருளாதாரத்தில் தற்கொலைகளினால் ஏற்படும் தாக்கம்” எனும் தலைப்பில் விரிவான அறிக்கையினை வெளியிட்டுஉரையாற்றினார்.
அப்போது, ஐ.ஐ.டி. நிர்வாகத்தில் உள்ள Centre 0f Excellence for Road Safety எனும் பிரிவின் சார்பில் சாலை விபத்து மரணங்கள், தற்கொலை மரணங்கள் பற்றிய ஒரு ஆராய்ச்சி கையேடு வெளியிடப்பட்டுள்ளது. இந்த கையேட்டில் ஆண்டொன்றுக்கு இந்தியாவில், தமிழ்நாட்டில் சாலை விபத்துகளினால் மரணம் அடைவோர்களின் எண்ணிக்கை 1.5 ல ட்சம் என்கின்ற அளவிலும், தற்கொலைகளின் எண்ணிக்கை 1 லட்சம் என்கின்ற அளவில் உள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை 17,000 சாலை விபத்துகளும் 19,000 தற்கொலைகளும் பதிவாகின்றன. தமிழ்நாட்டில் இந்த இரு பிரச்சனைகளக்கும் தமிழ்நாடு முதலமைச்சரால் பல தீர்வுகள் காணப்படுகின்றன. தமிழ்நாட்டில் 6 பூச்சுக்கொள்ளிகளுக்கு 60 நாட்களுக்கான தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. மோனோகுரோட்டோபாஸ், புரோஃபெனோபாஸ், அசிபேட், புரோஃபெனோபாஸ் சைபர்மெத்ரி, குளோர்பைரிபாஸ்சைபர் மெத்ரின், மற்றும் குளோர்பைரிபாஸ் ஆகிய 6 பூச்சுக்கொள்ளிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின் படி தற்காலிக தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கிடைக்கும் தகவலின்படி ஒன்றிய அரசுக்கு அனுப்பிநிரந்தர தடைகோர உள்ளோம்.
18.12.2021 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 எனும் மகத்தான திட்டத்தினை சாலை விபத்துகளினால் பாதிக்கப்படுவோர்களுக்காக கொண்டு வந்தார். அந்த திட்டத்தின்படி 500 க்கும் மேல் அதிகமாக விபத்துகள் நடக்கும் இடங்கள் கண்டறியப்பட்டு அதன் அருகில் இருக்கும் 679 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உடனடியாக விபத்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முதல் 48 மணி நேரத்தில் அளிக்கப்படும் சிகிச்சைகளுக்கு அரசே ரூ.1 லட்சம் வரை தரும் வகையில் திட்டம் தொடங்கப்பட்டது. விபத்துகளில் சிக்கியவர்களை மருத்துவமனைகளுக்கு கொண்டு வந்து சேர்பவர்களுக்கு உதவித் தொகையாக ரூ.5000 இந்த திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. கடந்த 15 மாத காலத்தில் மட்டும் தமிழ்நாட்டில் விபத்துக்குள்ளாகி சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கை 1,49,785 ஆகும். இதற்காக தமிழ்நாடு அரசு ரூ.132,19,54,660 ஆகும். இதன் மூலம் சாலை விபத்துகளில் சிக்குவோர்களுக்கு உடனடியாக சிகிச்சை வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் 22.12.2022 அன்று கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் “மனம்” எனும் திட்டத்தினை தொடங்கினார்கள். மனநல நல்லாதரவு மன்றம் என்கின்ற இந்த அமைப்பு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும தொடங்கப்பட்டுள்ளது. இதன் செயல்பாடு மிக சிறப்பாக உள்ளது, மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தினைபோக்கும் வகையில் மனநல ஆலோசனைகள் இதன் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டம் அரசு கலைக்கல்லூரிகள், தொழில்நுட்ப கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இந்த நிலையில் ஐ.ஐ.டி. நிர்வாகம் தற்போது விபத்துகள் மற்றும் தற்கொலைகளினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விரிவான அறிக்கையினை தயாரித்துள்ளார்கள். இந்த அறிக்கை தமிழ்நாடு அரசின் தற்கொலை தடுப்பு நடவடிக்கைகளக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
செப்டம்பர் மாதத்திற்கு பிறகு 3 தற்கொலைகள் இந்த ஐ.ஐ.டி. வளாகத்தில் நடைபெற்றுள்ளது. எந்த காரணமாக இருந்தாலும் இந்த தற்கொலை என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. எனவே ஐ.ஐ.டி. இயக்குநர், தமிழ்நாடு அரசின் தேசிய சுகாதார குழும இயக்குநரிடம் மருத்துவக் கல்லூரிகளில் செயல்படுத்தப்படும் “மனம்” எனும் திட்டத்தினை சென்னை ஐ.ஐ.டி. வளாகத்திலும் செயல்படுத்துவது தொடர்பாக கலந்து பேச உள்ளார்கள். மாணவர்களாக இருந்தாலும், யாராக இருந்தாலும் தற்கொலைகள் என்பது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும் என்று அமைச்சர் கூறினார்.
இதில் சென்னை இந்திய தொழில்நுட்பகழக இயக்குநர் பேராசிரியர். வி.காமகோட்டி, பேராசிரியர்.வெங்கடேஷ் பாலசுப்பிரமணியன், டாக்டர். நிஜினாநாசர், டாக்டர். கருப்பையா, பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.