சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: பெண் தொழிலாளர் பலி

விருதுநகர்:
சாத்தூர் அருகே மார்க்நாதபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பெண் தொழிலாளி ஒருவர் பலியாகினார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணையை சேர்ந்த கேசவன் (வயது 50) என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை மார்க்நாதபுரத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலை உரிமம் பெற்று சுமார் 90 அறைகளில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் சனிக்கிழமை வழக்கம் போல் இந்த பட்டாசு தொழிற்சாலையில் பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்று வந்தது. இதில் மதியத்திற்கு மேல் ஆலையில் உள்ள மூலப்பொருட்கள் வைத்திருக்கும் ஒரு அறையில் தீ விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து இந்த தொழிற்சாலையில் உள்ள அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளும் வெடித்து சிதறின. இந்த தீ விபத்தில் அந்த அறையில் இருந்த தொழிற்சாலையின் மார்க்நாதபுரத்தை சேர்ந்த கணக்காளராக பணியாற்றி வரும் ஜெயசித்ரா (24) என்ற பெண் தீ விபத்தில் சிக்கி உடல் கருகிய நிலையில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த சாத்தூர் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டனர்.மேலும் இந்த தீ விபத்தில் பட்டாசு தொழிற்சாலை பணியாளர்களின் 12-இருசக்கர வாகனங்களும் தீயில் கருகின. தீ விபத்து குறித்து ஏழாயிரம்பண்ணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய