சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், பெருநகர சென்னை மாநகராட்சி, இராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட பிரகாசம் சாலையில் ரூ.5.55 கோடி மதிப்பீட்டில் 1.11 கி.மீ. நீளத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால் பணியினை கூடுதல் தலைமைச் செயலாளர்/ ஆணையாளர் ஜெ. ராதாகிருஷ்ணன், நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, கூடுதல் ஆணையர் (வருவாய் (ம) நிதி) ஆர்.லலிதா, இணை ஆணையர் (பணிகள்) டாக்டர் ஜி.எஸ்.சமீரன், வடக்கு வட்டார துணை ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தலைமைப் பொறியாளர் (பொது) எஸ்.ராஜேந்திரன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.