சிறையில் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து பேச அவரது மனைவி புவனேஸ்வரிக்கு அனுமதி மறுப்பு

ராஜமுந்திரி:
திறன் மேம்பாட்டு கழக நிதி முறைகேடு வழக்கில் ராஜமுந்திரி மத்திய சிறையில் உள்ள சந்திரபாபு நாயுடுவை அவரது மனைவி புவனேஸ்வரி சந்தித்துப் பேச சிறை அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர்

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் ஆட்சியில் திறன் மேம்பாட்டு கழக நிதியில் ரூ.371 கோடி முறைகேடு நடந்ததாக கூறப்படும் வழக்கில் அவரை சிஐடி போலீஸார் கடந்த சனிக்கிழமை கைது செய்தனர். அவர் ராஜமுந்திரி மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

ராஜமுந்திரியிலேயே தங்கி உள்ள சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஸ்வரி, நேற்று காலை அவரை காண மத்திய சிறைக்கு சென்றார். ஆனால், அவருக்கு அனுமதி கொடுக்கவில்லை. மனைவி என்பவர் ஒரு வாரத்தில் 3 முறை சென்று பார்க்க அனுமதி இருந்தாலும், சிறை அதிகாரிகள் வேண்டுமென்றே மறுத்து விட்டார்கள் என புவனேஸ்வரி குற்றம் சாட்டினார்.

ஐடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்:
சந்திரபாபு நாயுடுவின் கைதை கண்டித்தும் அவரை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ஐடி துறையில் பணியாற்றி வரும் ஏராளமான ஐடி ஊழியர்கள் கடந்த 2 நாட்களாக தாமாகவே முன் வந்து போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக, ஹை டெக் சிட்டியில் பணியாற்றும் ஐடி ஊழியர்கள் நூற்றுக்கணக்கானோர், சந்திரபாபு நாயுடுவால்தான் நாங்கள் இன்று ஐடி துறையில் பணியாற்றி வருகிறோம்.

இத்தனை பேருக்கு வாழ்க்கையை கொடுத்த ஒரு நல்ல மனிதரை பொய் வழக்குகள் போட்டு, அரசியல் காழ்ப்புணர்வுக்காக சிறையில் அடைத்தது ஏன் ? அவரை உடனடியாக விடுதலைசெய்ய வேண்டும் என்றும் இதனை மத்திய அரசு கவனத்தில் கொண்டு உடனடியாக சந்திரபாபுவை விடுதலைசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தனர்.

இதேபோல், விஜயவாடா, குண்டூர், விசாகப்பட்டினம், கிழக்கு, மேற்கு கோதாவரி மாவட்டங்களில் கல்லூரி மாணவர்கள் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக திடீரென கல்லூரிகள் முன் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று விடுதிகளில் தங்கிப் படிக்கும் கல்லூரி மாணவர்களை போலீஸார் காலி செய்து வீடுகளுக்கு அனுப்பிவிட்டனர். மேலும், கல்லூரி முன் சந்திரபாபுவுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்தினால், வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் மாணவர்களை போலீஸார் எச்சரித்தனர்.

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய