ஜாக்டோ -ஜியோ அறிவித்த போராட்டம் தற்காலிக வாபஸ்

சென்னை:
மத்திய அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு ஜாக்டோ ஜியோ அறிவித்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2-ந் தேதி ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற்றது. தங்களின் வாழ்வாதார கோரிக்கைகளை முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லும் விதமாக ஏப்.11-ந் தேதி கோட்டையை நோக்கி முற்றுகையிடும் போராட்டம் நடத்துவது என ஜாக்டோ ஜியோ உயர்மட்டக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட இருந்த ஜாக்டோ ஜியோ அமைப்பினரை அழைத்து தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை தலைமைச் செயலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சு வார்த்தையில், ஜாக்டோ-ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றன்ர.
பேச்சுவார்த்தையில் அவர்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்ததோடு, போராட்டத்தை கைவிட வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசின் சார்பில் வலியுறுத்தியதாகவும், அவர்களின் கோரிக்கைகள் குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர்கள் குழு தெரிவித்தனர். அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தையை அடுத்து வரும் 11 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த ஜாக்டோ ஜியோ போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட