டிஜிட்டல் கைது மோசடிகளில் இருந்து மனித உரிமைகளைப் பாதுகாத்தல்: தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆலோசனை

புதுதில்லியில் உள்ள மனித உரிமை பவனில், ‘டிஜிட்டல் கைது மோசடிகளில் இருந்து மனித உரிமைகளைப் பாதுகாத்தல்’ குறித்த திறந்த நிலை விவாதத்தை தேசிய மனித உரிமைகள் ஆணையம் நடத்தியது.இதற்குத் தலைமை தாங்கிய ஆணையத் தலைவர் நீதிபதி வி. ராமசுப்பிரமணியம், சைபர் மோசடிகளால் கடந்த ஆறு ஆண்டுகளில் இந்தியர்கள் சுமார் ரூ. 52,976 கோடியை இழந்துள்ளதாகவும், இதில் டிஜிட்டல் கைது மோசடிகள் பெரும் பங்கு வகிப்பதாகவும் கவலையுடன் தெரிவித்தார்.மோசடி செய்பவர்கள் சட்ட அமலாக்க அமைப்புகளின் பெயரைப் பயன்படுத்தி மக்களை அச்சுறுத்தி பணம் பறிப்பதாகக் குறிப்பிட்ட அவர், பணத்தை மீட்டெடுக்கும் சட்ட நடைமுறைகள் சிக்கலானதாக இருப்பதைச் சுட்டிக்காட்டினார். மேலும், ‘மியூல்’  கணக்குகள் மூலம் பணப் பரிமாற்றம் நடப்பதைத் தடுக்கவும், நீண்ட கால ஓடிடி  அழைப்புகள் குறித்து எச்சரிக்கை விடுக்கவும் அவர் பரிந்துரைத்தார். டிஜிட்டல் மோசடிகளில் இருந்து மக்களைப் பாதுகாப்பது ‘ராஜதர்மம்’ என்று குறிப்பிட்ட ஆணைய உறுப்பினர்கள், இதற்கான நடைமுறைத் தீர்வுகளைக் கண்டறிய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர், நீதிபதி  பித்யுத் ரஞ்சன் சாரங்கி, டிஜிட்டல் மோசடிகளை எதிர்கொள்வதில் தற்போதைய நடைமுறைகளில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டினார். இத்தகைய ஆக்கபூர்வமான விவாதங்கள், விரைந்து நடைமுறைப்படுத்தக்கூடிய தீர்வுகளை உருவாக்க உதவும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.மத்திய அமைச்சகங்கள், ரிசர்வ் வங்கி மற்றும் சைபர் நிபுணர்கள் இதில் பங்கேற்றனர்.

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச