டெண்டருக்கு முன்பே முதலமைச்சருக்கான புதிய அறை பணிகள் தொடங்கியது எப்படி?: – டி.டி.வி. தினகரன் கேள்வி

சென்னை:
தலைமைச் செயலகத்தில் முதலமைச்சருக்கான புதிய அறையை தயார் செய்வதற்கான டெண்டர் அறிவிக்கும் முன்னரே தவெக அரசு பணிகளை தொடங்கியுள்ளதாக குற்றம் சாட்டிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

சென்னை தலைமைச் செயலகத்தின் பிரதான கட்டடத்தில் இருந்த முதலமைச்சரின் அறையை அருகில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது தளத்திற்கு மாற்றுவது தொடர்பாக பணிகள் கடந்த மாதமே தொடங்கப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில், அப்பணிக்கான டெண்டர் அண்மையில் வெளியிடப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசுக்கு இருக்கும் நிதி நெருக்கடியில் முதலமைச்சரின் அறை மாற்றப்படுவது அவசியம்தானா? என்ற கேள்விக்கு மத்தியில், அப்பணிகளுக்கான அறிவிக்கப்பட்ட டெண்டரில் வெளிப்படைத் தன்மையின்றி பல்வேறு விதிமீறல்கள் நடைபெற்றிருப்பதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டு பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.
கடந்த 13ஆம் தேதி நாளிதழ்களில் டெண்டர் தொடர்பான விளம்பரம் வெளியிடப்பட்டு நான்கு நாட்கள் கழித்து இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள ஆவணங்களிலும் பணிக்கான மொத்த மதிப்பை குறிப்பிடாமல் மறைத்திருப்பதன் மூலம் வெளிப்படைத் தன்மைமிக்க ஆட்சி என்று சொல்வதற்கான தகுதியை தவெக அரசு இழந்திருப்பதாகவே பார்க்க வேண்டியுள்ளது.
முதலமைச்சரின் அறையை மாற்றும் பணிகளுக்கான டெண்டர் அறிவிக்கும் முன்பாக பணிகள் தொடங்கப்பட்டது எப்படி? யாருடைய உத்தரவின் பேரில் பணிகள் தொடங்கப்பட்டன? எந்த அடிப்படையில் ஒப்பந்ததாரர் தேர்வு செய்யப்பட்டார்? பணிகள் தொடங்கிய பின் டெண்டர் கோரியது ஏன்? டெண்டர் அறிவித்த பின்பும் அதற்கான ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யாதது ஏன்? என்ற மக்கள் மத்தியில் எழுந்திருக்கும் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் வைத்திருக்கும் பதில் தான் என்ன?
ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் ஊழலற்ற, நியாயமான மற்றும் வெளிப்படைத் தன்மையான ஆட்சிதான் எங்களின் இலக்கு என வீரவசனம் பேசிக் கொண்டிருக்கும் முதலமைச்சர், அவருக்கான புதிய அறை மாற்றம் தொடர்பான டெண்டர்களிலேயே நடைபெற்றிருக்கும் இவ்வாறான விதிமுறை மீறல்கள், மற்ற துறைகளில் டெண்டர்கள் எப்படி வெளிப்படைத்தன்மையாக நடைபெறும் என்ற ஐயத்தை எழுப்புகிறது.
எனவே, விளம்பரங்களிலும், மேடைப் பேச்சுகளிலும் வெளிப்படைத்தன்மை என்ற சொல்லை பெயரளவுக்கு பயன்படுத்தாமல், தன் தலைமையிலான ஆட்சி நிர்வாகத்தில் முழுமையாக செயல்படுத்திட முன்வர வேண்டும் என முதலமைச்சர் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

தவெக ஆட்சியில் 6 காவல் மரணங்கள்; இனியும் நடக்காமல் அரகூ தடுக்க வேண்டும்; அன்புமணி

சென்னை:பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுரை சிந்தாமணி காவல் நிலையத்துக்கு

டெண்டருக்கு முன்பே முதலமைச்சருக்கான புதிய அறை பணிகள் தொடங்கியது எப்படி?: – டி.டி.வி. தினகரன் கேள்வி

சென்னை:தலைமைச் செயலகத்தில் முதலமைச்சருக்கான புதிய அறையை தயார் செய்வதற்கான டெண்டர் அறிவிக்கும் முன்னரே

கர்நாடக நிர்வாகத்தில் தமிழகம் தலையிடக்கூடாது: முதல்வர் டி.கே.சிவகுமார்

பெங்களூரு:கர்நாடக மாநிலம் சாம்​ராஜநகர் மாவட்​டம் ஹனூர் அரு​கே​யுள்ள காவிரி வனவிலங்கு சரணாலய பகு​தி​யில்

செய்தியாளர்களை தாக்கிய தவெக எம்எல்ஏ கபில் மீது 21 நாட்களுக்குப் பிறகு வழக்குப்பதிவு

ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் யூடியூபர் மற்றும் செய்தியாளர்களைத் தாக்கியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில்,

இறந்த தமிழர்களின் குடும்பங்களுக்கு கர்நாடக அரசு கூடுதல் நிதி வழங்க வேண்டும்: காங். எம்எல்ஏ தாரகை கத்பர்ட்

சென்னை:கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழக சட்டசபையில் கொண்டுவரப்பட்ட