சென்னை:
தங்கம் விலை இந்த மாத தொடக்கத்திலிருந்து தொடர்ந்து குறைந்து வந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை உயர்ந்து வருகிறது. சென்னையில் இன்று ஒரே நாளில் ஒரு கிராமிற்கு ரூ.55 உயர்ந்து, ரூ. 5325 ஆக விற்பனையாகிறது.
அதன்படி 22 காரட் ஆபரண தங்கம், சவரனுக்கு ரூ.42,600 ஆக விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிராம் 80 பைசா உயர்ந்து, ரூ. 69.50 எனவும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 69,500 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.