தமிழக கோவில்களில் தமிழிலேயே குடமுழுக்கு செய்ய வேண்டும்: இந்து சமய அறநிலையத்துறைக்கு கோரிக்கை

திருநெல்வேலி:
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்ற தமிழில் குடமுழுக்கு நடத்துவது தொடர்பாக நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் பதில் அளித்தது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ஒய்.பி.இருதயராஜ், நுங்கம்பாக்கம், ஆணையர் மற்றும் உறுப்பினர்கள் கூட்டுக்குழு இந்து சமய அறநிலைய ஆட்சித்துறைக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
தஞ்சையை பொறுத்தவரை மட்டும் கருவூரார் சித்தர் குடமுழுக்கு எப்படி செய்ய வேண்டும்? என்னென்ன மந்திரங்கள் சொல்ல வேண்டும்? என்பதையெல்லாம் விலாவாரியாக எழுதி வைத்துள்ளார் என்று அவர் வழி வந்துள்ள வாரிசான மூங்கிலடியார் அறிவிக்கிறார்.
திருமந்திரம் ஆகம விதிகளை விரிவாக எடுத்துரைக்கிறது. தமிழ் திருமுறைகள் இறைவனை எழுந்தருள செய்ய பாக்கள் பல செய்துள்ளது. தமிழில் குடமுழுக்கு பல்லாயிரக்கணக்கான கோயில்களில் ஏற்கெனெவே உலகம் முழுவதும் செய்யப்பட்டுள்ளது. நம்மூரில் தான் இன்னும் சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்திக் கொண்டிருக்கிறோம்.
வெளிநாடு வாழ் தமிழர்கள் நமது ஓதுவார்களை தமிழ் ஆசான்களை வைத்து குடமுழுக்கு நடத்திக்கொண்டிருக்கின்றனர். குடமுழுக்கு நடத்தும் வழக்கம் சம்ஸ்கிருத வேதத்தில் தான் இல்லை, கோயிலோ சிலை வழிபாடோ சம்ஸ்கிருத வேதத்தில் சொல்லப்படவில்லை. பிறகு ஆகமம் குடமுழுக்கு மட்டும் எப்படி அதில் வந்திருக்கு முடியும்? என்பது மில்லியன் டாலர் கேள்வி.
அது தமிழிலிருந்து மொழிபெயர்த்து சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டது தான் ஆகமம் என்பது, ஆகமம் என்றால் சமஸ்கிருதத்தில் ‘வந்தது’ என்று பொருள். அதாவது தமிழிலிருந்து வந்தது என்று பொருள். உலகெங்கும் எல்லா மதத்தினரும் வழிபாட்டை தங்கள் தாய்மொழியில் தான் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் . பௌத்தர்கள் இலங்கையில் சிங்களத்திலும், சீனாவில் சீன மொழியிலும், ஜப்பானில் ஜப்பானிய மொழியிலும் நடத்துகிறார்கள்.கிருத்துவர்களும் அப்படியே வழிபாடுகளை எபிரேயத்தில் (ஹீப்ரு) நடத்துவதில்லை.அவர்களது தாய் மொழியில் தான் நடத்துகிறார்கள்.அதிலும் சமஸ்கிருதம் ஒன்றும் தமிழ் கடவுளரின் மொழியும் அல்ல என்கிற போது , அதில் வழிபாடு நடத்துவது என்பது அனர்த்தம், ஆக்கிரமிப்பு.சமஸ்கிருதத்தை விட மிகவும் பழமையான மொழி தமிழ் மொழி.
ஆகவே இந்து கடவுள்களுக்கு கடவுள்கள் அறிந்த மொழி தமிழ் மொழி மட்டுமே. ஆகவே நாம் தமிழில் வழிபாடு செய்தால் கடவுளுக்கும் எளிதில் புரியும் என்பதுதான் நூறு சதவீதம் உண்மை .இதை யாராலும் மறுக்க முடியாது.தமிழுக்குப் பின்னால் எத்தனையோ ஆண்டுகள் கழித்து உருவான சமஸ்கிருதம். தமிழ் கடவுளான முருகப் பெருமானுக்கு கூட தெரியாது .
ஆனால், தமிழ் கடவுள் முருகன் கோவில்களில் கூட சமஸ்கிருத மந்திரங்கள் மூலமே வழிபாடு நடக்கிறது. நாம் காலத்திற்கு ஏற்றபடி நமது தாய் மொழியான தமிழில் வழிபாடு நடத்தி. யாவருக்கும் புரியும் வகையில்.கடவுளை வழிபடுவது தான் சாலச் சிறந்தது. இது நமது சந்ததிகளுக்கும் மிகவும் நல்லது. அவர்கள் தங்களது வழிபாட்டை தாய்மொழியில் தெரிந்து கொண்டும், புரிந்து கொண்டும் வழிபடுவது தான் தலைசிறந்த ஒன்று என்பது எனது பணிவான கருத்து. ஆகவே கோவில்களில் தமிழில் குடமுழுக்கு செய்வதுதான் சாலச் சிறந்தது என்று கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400

தமிழக கோவில்களில் தமிழிலேயே குடமுழுக்கு செய்ய வேண்டும்: இந்து சமய அறநிலையத்துறைக்கு கோரிக்கை

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400