காவிரி டெல்டாவில் புதிதாக 3 நிலக்கரி சுரங்கம் அமைக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு தமிழக விவசாயிகள், அரசியல் தலைவர் என பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இவ்விவகாரம் தொடர்பாக கடந்த புதன்கிழமை அன்று நடைபெற்ற சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
தீர்மானத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க எந்த காலத்திலும் அனுமதி கிடையாது என்று கூறியிருந்தார். இந்நிலையில், காவிரி டெல்டாவில் புதிதாக 3 நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
மேலும் அனைத்து அரசியல் கட்சியினரும் நிலக்கரி சுரங்கத்திற்கு எதிராக குரல் எழுப்பினர்.
இந்தநிலையில், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து சுரங்கம் அமைக்கும் திட்டம் கைவிடப்படுவதாக மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியுள்ளார். தமிழகத்தின் டெல்டா பகுதியில் அறிவிக்கப்பட்டிருந்த மூன்று நிலக்கரி சுரங்கங்களுக்கான டெண்டரை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை டுவிட் செய்துள்ளார்.

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்





