தமிழகத்தில் வளம்வரும் போதைப்பொருள் தடுப்பு ஆலோசனை கூட்டம் : முதல்வர் ஸ்டாலின்

தமிழக முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுடன் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தி உள்ளார்.

தமிழகம் முழுவதும் போதைப்பொருள் நடமாட்டம் அதிகளவில் உள்ளதாக பல்வேறு கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.  இது குறித்து இன்று தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை ஆலோசனை கூட்டத்தில்  தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா,  முதல்வரின் முதன்மை செயலாளர் முருகாநந்தம்,  டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை காவல் ஆணையர்,  சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.

ஏற்கனவே சில தினங்களுக்கு முன் தலைமை செயலாளர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடத்தி அறிவுரைகள் வழங்கப்பட்டன.  தற்போதைய ஆலோசனை கூட்டத்தில் போதைப்பொருள் நடமாட்டம் தொடர்பாக மாவட்ட வாரியாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

தமிழகத்தின் பல பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட பல வகை போதை பொருள்கள் பயன்பாடு அதிகரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் சூழலில்,  இந்த ஆலோசனைக் கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. மேலும்  போதைப்பொருள்களை முழுமையாகக் கட்டுப்படுத்துவது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளும், முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

தமிழகத்தில் வளம்வரும் போதைப்பொருள் தடுப்பு ஆலோசனை கூட்டம் : முதல்வர் ஸ்டாலின்

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube