சென்னை:
தமிழ்நாடு முதலமைச்சர் நல்வழிகாட்டுதலின்படி சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்காக பல்வேறு புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் சுற்றுலாத்துறையின் மூலம் அனைத்து சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் சுற்றுலா தொழில்முனைவோர்கள் மற்றும் ஓட்டல் முகவர்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விண்ணப்பங்கள் கீழ்க்கண்ட (www.tntourismawards.com) இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் எஸ்.மாலதிஹெலன், தெரிவித்துள்ளார்கள்.
சுற்றுலாத்துறை மூலம் கீழ்க்கண்ட 13 வகையான விருதுகள் வழங்கப்படுகின்றன.
விருதுகளின் பட்டியல்:
1.தமிழ்நாட்டிற்கான சிறந்த சுற்றுலா ஏற்பாட்டாளர் (Best Inbound Tour Operator)
- சிறந்த உள்நாட்டு சுற்றுலா ஏற்பாட்டாளர் (Best Domestic Tour Operator))
- (Best Travel Partner. Heritage. Village, Farm Tourism, Adventure tourism)
- சிறந்த தங்குமிடம் (Best Accommodation)
- சிறந்த உணவகம் (Best Restaurant)
- தங்குமிடம் மற்றும் படகு இல்லம் (Tamil Nadu Tourism Development Corporation Star Performer)
- சுற்றுலா ஊக்குவிப்பிற்கான சிறந்த மாவட்டம் (Tourism Promotion Award (Best District)
- சுத்தமான சுற்றுலாத்தலம்(Cleanest Tourism Destination)
- பல்வேறு சுற்றுலாப்பிரிவுகளின் சிறந்த ஏற்பாட்டாளர் (Best Niche Tourism Operator)
- சிறந்த சிறப்பு சுற்றுலா நிறுவனம் – சிறந்த மருத்துவ மற்றும் ஆரோக்கிய சுற்றுலா நிறுவனம் (Best Niche Tourism Operator – Best Medical and Wellness Tourism Establishment)
- சிறந்த சாகச மற்றும் தங்கும் முகாம்கள் சுற்றுலா ஏற்பாட்டாளர்(Best Adventure Tourism and Camping site Operator)
- சிறந்த சுற்றுலா வழிகாட்டி (Best Tourist Guide)
- சுற்றுலா மற்றும் விருந்தோம்பலில் சிறந்த கல்வி நிறுவனம் (Best Educational Institution for Tourism and Hospitality)
என மேற்குறிப்பிட்ட விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வருகின்ற 30.09.2026-க்குள் (www.tntourismawards.com) என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டுமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் எஸ்.மாலதிஹெலன், தெரிவித்துள்ளார்.







