திருச்சி:
மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா வீட்டிற்கு அருகே எஸ்.பி.ஐ காலனி பகுதியில் இன்று காலை இறகு பந்து மைதானத்தை திறந்து வைப்பதற்காக அமைச்சர் கே.என்.நேரு வருகை தந்தார். அப்பொழுது எம்.பி சிவாவின் ஆதரவாளர்கள் அவரது பெயரை பெயர் பலகையில் போடவில்லை என கூறி நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேருவிற்கு எதிராக கருப்பு கொடியை காட்டினர்.
கருப்பு கொடி காட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் எம்.பி திருச்சி சிவாவின் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் வீட்டின் கண்ணாடிகளை உடைத்தனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து கருப்பு கொடிய காட்டியவர்கள் மற்றும் கண்ணாடியை உடைத்தவர்களை கண்டோன்மென்ட் போலீசார் கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!
இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்






