
இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியில் இந்திய நிலக்கரி நிறுவனத்தின் அரங்கு திறப்பு
Posted On: 18 NOV 2025 1:16PM by PIB Chennai
புதுதில்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்று வரும் இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சி 2025-ல் இந்திய நிலக்கரி நிறுவனத்தின் அரங்கை மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி இன்று திறந்து வைத்தார்.
இந்த அரங்கில் எரிசக்தி பாதுகாப்பில் இந்தியாவின் வளர்ச்சி பன்முகத்திட்டங்கள் மற்றும் நீடித்த நடைமுறை ஆகியவை குறித்து எடுத்துரைக்கப்படுவது, பார்வையாளரின் கவனத்தை ஈர்க்கிறது. நிலக்கரி சுரங்கத்தில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவது, இந்திய நிலக்கரி நிறுவனத்தின் துணை அமைப்புகளின் தலைமையங்களில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் செயல்படுவது ஆகியவை குறித்து இந்த அரங்கில் விளக்கப்படுகிறது. பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டு பயிற்சிக்கான மெய்நிகர் எதார்த்தம் என்பது ஒரு அதிவேக தொழில்நுட்பமாகும். இதன் நேரடி விளக்கம் குறித்து இந்த அரங்கில் விளக்கப்படுகிறது.
***
Read this release in: English , Urdu , हिन्दी , Marathi , Telugu




