அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் உலக புகழ்பெற்ற தூத்துக்குடி பரிசுத்த பனிமய அன்னை பேராலய 444-ம் ஆண்டு பெருவிழா சிவகங்கை அருகே 40 வயது நபருக்கு நேர்ந்த கொடூரம் தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிலக்கரி சுரங்கத் தொழிலில் திறன் அதிகரிப்பதில் என்.எல்.சி.ஐ.எல்  முயற்சியை அமைச்சர் பாராட்டினார்

மத்திய நிலக்கரி, சுரங்கத்துறை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி, மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் விஸ்மிதா தேஜ் உடன் இணைந்து சென்னையில் 30.01.25 அன்று நெய்வேலி அனல் மின் நிலைய திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் என்.எல்.சி.ஐ.எல் நிறுவனத்தின் செயல் இயக்குநர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.அப்போது பேசிய அமைச்சர் திரு கிஷன் ரெட்டி, 2047-ம் ஆண்டுக்குள் “வளர்ச்சியடைந்த இந்தியா” உருவாக்குவதில் பிரதமரின் பரந்த தொலைநோக்குப் பார்வையை எடுத்துரைத்தார். இந்தியாவில் சிறப்பாக செயல்படும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாக  என்.எல்.சி.ஐ.எல் திகழ்கிறது என்று அவர் பாராட்டினார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் இந்நிறுவனம் பெரிய அளவில் பன்முகப்படுத்தப்பட்டதற்கு பாராட்டு தெரிவித்த அவர், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் 1 ஜிகாவாட் அளவைக் கடந்த நாட்டின் முதல் பொதுத்துறை நிறுவனம் இது என்று கூறினார்.தாளபிரா, தெற்கு பச்வாரா, வடக்கு தாடு, மச்சகட்டா மற்றும் பத்ரபாரா ஆகிய இடங்களில் உள்ள நிலக்கரி சுரங்கங்கள் மூலம் நிலக்கரி சுரங்கத் தொழிலில் திறன் அதிகரிப்பதில் என்.எல்.சி.ஐ.எல்  முயற்சியை அமைச்சர் பாராட்டினார். பிரதமரால் திறந்து வைக்கப்பட்ட தாளபிராவில் 3×800 மெகாவாட் அனல் மின் திட்டத்தை நிர்மாணிப்பதில் என்.எல்.சி.ஐ.எல் மேற்கொண்ட முயற்சிகளையும் அவர் பாராட்டினார். ராஜஸ்தான், அசாம் ஆகிய மாநிலங்கள் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் யூனியன் பிரதேசம் ஆகியவற்றில்  பெரிய அளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனை அதிகரிப்பதிலும், இதர பசுமை முன்முயற்சிகளிலும் என்.எல்.சி.ஐ.எல் நேர்மையான முயற்சிகளுக்கு அமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார்.குழந்தைகள் மற்றும் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ஏராளமான ஆற்றலையும் வாய்ப்புகளையும் கொண்ட சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான வழிகளை ஆராயுமாறு என்.எல்.சி.ஐ.எல் க்கு அவர் அழைப்பு விடுத்தார்.என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட விபத்து காப்பீட்டுத் திட்டத்தை இரண்டு மாத காலத்திற்குள் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு என்.எல்.சி.ஐ.எல் நிர்வாகத்திடம் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் மேலும் தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில் நெய்வேலியில் என்.எல்.சி இந்தியா நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட “பாரம்பரியம்” என்று பெயரிடப்பட்ட அருங்காட்சியகத்தை மெய்நிகர் முறையில் திறந்து வைத்தார். “என்.எல்.சி.ஐ.எல் விங்ஸ்” என்ற புதிய மொபைல் செயலி மற்றும் என்.எல்.சி.ஐ.எல் இணைய வலைத்தளத்தின் புதிய பதிப்பையும் அவர் தொடங்கி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின்

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கல்வி அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் – மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இன்று கடமை மாளிகையில் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை

நிலக்கரி சுரங்கத் தொழிலில் திறன் அதிகரிப்பதில் என்.எல்.சி.ஐ.எல்  முயற்சியை அமைச்சர் பாராட்டினார்

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube