- தமிழக நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராக ஆதவ் அர்ஜுனா பொறுப்பு வகித்து வருகிறார்.
- புதிய திட்டங்களை மேற்கொள்வதற்கு முன்பு, பழைய பணிகளை மறுஆய்வு செய்து, நிர்வாகத்தை மறுசீரமைக்க வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளதால் கடந்த இரண்டு மாதங்களாக நெடுஞ்சாலைத்துறையில் எந்தவொரு டெண்டரும் வெளியிடவில்லை.
- நெடுஞ்சாலைத்துறையில் கடந்த ஆட்சியில் “ப்ரீ ஃபிக்ஸ்ட் கமிஷன் முறை” செயல்பட்டதாகக் கூறி, தற்போது நடைபெற்று வரும் அனைத்து திட்டப் பணிகளையும் முழுமையாக மறுஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளார். பழைய திட்டங்கள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு, துறை மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
- மேலும் முறைகேடுகள் கண்டறியப்படும் இடங்களில் ஒப்பந்ததாரர்கள் மற்றும் அதிகாரிகளிடமிருந்து விளக்கங்கள் கோரப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
- அந்தவகையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா துறையில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.
- இந்த ஆய்வில் கோயம்பேடு மேம்பாலம், ரூபாய் 1,099 கோடி மதிப்பிலான கிழக்கு கடற்கரைச் சாலை (ECR) விரிவாக்கத் திட்டம், மேடவாக்கம், மூலக்கடை, தாம்பரம் உள்ளிட்ட முக்கிய சந்திப்புகளில் அமைக்கப்பட்ட மேம்பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
- இதையடுத்து, சென்னை பெருநகரத்துக்கென ஒரு பிரத்யேக நெடுஞ்சாலைப் பிரிவு தேவையில்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
- கட்டுமானம் மற்றும் பராமரிப்புப் பிரிவில் போதுமான பணியாளர்கள் உள்ளனர். எனவே, சென்னை மெட்ரோவுக்கு என தனி பிரிவு தேவையில்லை..
- இதையடுத்து, சென்னை மெட்ரோ பிரிவு மொத்தமாக கலைக்கப்பட்டுள்ளது.
- இந்த பிரிவின் தலைமைப் பொறியாளர்கள், பொறியாளர்கள் திருச்சி, மதுரை மற்றும் கோவைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இனிமேல், அனைத்துத் திட்டங்களும் கட்டுமானம் மற்றும் பராமரிப்புப் பிரிவின் மூலமாகவே செயல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.






