பருப்பு வகைகள் வர்த்தகத்தில் ஈடுபடுவோர், அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் பல்வேறு விதிகளின்படி செயல்படுவது உறுதி செய்யப்படும் : நுகர்வோர் விவகாரங்கள் துறை

நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் நிதி கரே, 2024 ஏப்ரல் 15 முதல் ஆன்லைன் இருப்பு கண்காணிப்பை செயல்படுத்துவதற்கு முன்னதாக பருப்பு தொழில்துறை பிரதிநிதிகளுடன் தொடர்ச்சியான ஆலோசனைகளை நடத்தினார். பருப்பு வகைகள் வர்த்தகத்தில் ஈடுபடுவோர், அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் பல்வேறு விதிகளின்படி செயல்படுவது உறுதி செய்யப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

இந்த தொழில் துறையினரிடமிருந்து பெறப்பட்ட கருத்துகள் மற்றும் சந்தை நிலவரத்திலிருந்து, பருப்பு சரக்கு நிலவரம் குறித்த உள்ளீடுகள் சரிபார்ப்பதற்காக தொகுக்கப்பட்டுள்ளன.

மியான்மரில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருப்பு வகைகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும், மாற்று நடைமுறைகள் மற்றும் மியான்மரில் இறக்குமதியாளர்கள் வைத்திருக்கும் இருப்பு போன்ற அம்சங்கள் குறித்தும் அவர் யாங்கூனில் உள்ள இந்திய தூதரகத்துடன் விவாதித்தார். வர்த்தக பரிவர்த்தனைகளை எளிமைப்படுத்தவும், அவற்றை மிகவும் திறன் வாய்ந்ததாக மாற்றவும் 2024 ஜனவரி 25 முதல் ரூபாய் க்யாட் தீர்வு என்ற நடைமுறை செயல்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

மியான்மரின் மத்திய வங்கி 2024 ஜனவரி 26 ஆம் தேதி சிறப்பு ரூபாய் வோஸ்ட்ரோ கணக்கின் (SRVA) கீழ் பரிவர்த்தனை நடைமுறைகளுக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. புதிய வழிமுறை கடல் வழி வர்த்தகம், எல்லைப்புற வர்த்தகம் ஆகியவற்றுக்கும் பொருட்கள் மற்றும் சேவைகளின் வர்த்தகம் ஆகியவற்றுக்கும் பொருந்தும்.

இறக்குமதியாளர்கள் மற்றும் ஆலை உரிமையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள் போன்ற தொழில்துறையினர் இறக்குமதி செய்யப்பட்ட மஞ்சள் பட்டாணி உள்ளிட்ட பருப்பு வகைகளின் இருப்பை வாராந்திர அடிப்படையில் https://fcainfoweb.nic.in/psp/ என்ற தளத்தில் 2024 ஏப்ரல்15 முதல் வெளியிடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களும் வாராந்திர கையிருப்பு விவரங்களை வெளியிடவும், அவர்கள் அறிவிக்கும் இருப்புகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் சரிபார்க்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 66 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 66

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’நகரின் மிகவும் எதிர்பார்க்கப்படும்

சட்ட உதவி தொடர்பான மண்டலப் பயிலரங்கம் தரம்சாலாவில் நாளை நடைபெறுகிறது

மத்திய அரசின் சட்டம்  அமைச்சகத்தின் நீதித் துறையால் செயல்படுத்தப்படும் மத்திய துறைத் திட்டமான திஷா திட்டம், சீர்திருத்த உற்சவம் ஆகியவற்றின் கீழ் ஒரு மண்டலப் பயிலரங்கு, நாளை (2026 ஜூன் 15) மதியம் 01:00 மணி முதல் இமாச்சலப் பிரதேசம் , காங்க்ரா, தரம்சாலாவில் உள்ள அரசு சட்டக் கல்லூரி கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நீதி கிடைப்பதை வலுப்படுத்துதல், சட்ட விழிப்புணர்வை ஊக்குவித்தல், கட்டணமில்லா சட்டச் சேவைகள், கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் நீதித்துறையில் மேற்கொள்ளப்பட்ட புரட்சிகரமான சீர்திருத்தங்கள் ஆகியவை தொடர்பான தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில், இமாச்சலப் பிரதேச ஆளுநர், இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஆகியோருடன், மத்திய சட்டத் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மெக்வால் கலந்துகொண்டு சிறப்பிப்பார்.அனைவருக்கும் நீதியை உறுதி செய்வதற்கான துறையின் தொடர்ச்சியான முயற்சிகள் இதில் எடுத்துரைக்கப்படும். மக்களின் அரசியலமைப்பு உரிமைகள், சட்ட உரிமைகள், பொறுப்புகள் ஆகியவை குறித்த புரிதலை ஆழப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சட்ட விழிப்புணர்வுப் பிரச்சாரமும் இந்நிகழ்ச்சியின் போது தொடங்கப்பட உள்ளது.

எங்களை ஏன் இந்த போருக்குள் இழுக்கிறீர்கள்?” -உயிர்பயத்துடன் இந்திய மாலுமிகள் வீடியோ வெளியீடு!

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65