
சென்னை: தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள சிபிஎஸ் (பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்) ரத்து செய்யப்பட்டு, பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்பட வேண்டும் என்று அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஆனால் அரசு அமைதியாகவே இருப்பதால், பழைய ஓய்வூதியத் திட்டம் உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு, ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அதிரடியாக அறிவித்துள்ளது.