பிரதமருக்கு மணிப்பூர் ஏன் செல்லவில்லை ?பாஜக அரசுக்கு கேள்வி ?

அமெரிக்கா சுற்ற பயணம் செல்லும் பிரதமருக்கு மணிப்பூர் செல்ல நேரம் இல்லையா? என காங்கிரஸ் உள்ளிட்ட 10 எதிர்கட்சிகள் கூட்டாக கேள்வி எழுப்பியுள்ளன.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் ஏராளமான பழங்குடி சமூக மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு நாகா, குக்கி, மைத்தேயி சமூக மக்கள் எண்ணிக்கையில் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இதில் மைத்தேயி சமூக மக்கள் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால், அவர்களின் இந்த கோரிக்கையை மற்றொரு முக்கிய சமூகமான குக்கி சமூக மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் இந்த இருதரப்புக்கும் இடையே மோதல் போக்கு எழுந்துவந்து.

இதையடுத்து கடந்த மாதம் சராசந்தூர் மாவட்டத்தில் மணிப்பூர் பழங்குடி இன மாணவர் சங்கம் சார்பாகப் பழங்குடியின மக்கள் ஒற்றுமை பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் வன்முறை வெடித்தது. பின்னர் இந்த வன்முறை மாநில முழுவதும் பரவியுள்ளது.

கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக வன்முறை வெடித்து வருகிறது. இந்த வன்முறையில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்தாமல் அமைதி காத்து வரும் ஒன்றிய அரசைக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்கா செல்லும் பிரதமருக்கு மணிப்பூர் செல்ல நேரம் இல்லையா? என காங்கிரஸ் உள்ளிட்ட 10 எதிர்கட்சிகள் கூட்டாக கேள்வி எழுப்பியுள்ளன.

இது குறித்து இன்று காங்கிரஸ், ஜே.டி.யூ, இடதுசாரிகள், திருணமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 10 கட்சிகள் நிர்வாகிகள் இன்று காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய ஜெய்ராம் ரமேஷ், “ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தமும், பா.ஜ.க அரசியலும்தான் மணிப்பூர் கலவரத்துக்கு காரணம். கடந்த 10 நாட்களாக பிரதமரை சந்திக்க நேரம் கேட்டும் பிரதமர் நேரம் தர மறுக்கிறார்.

பிரதமருக்கு மணிப்பூர் பிரச்னைகளை தீர்க்க நேரம் இல்லை. ஆனால் அமெரிக்கா செல்ல அவருக்கு நேரம் உள்ளது. உயிருக்கு பயந்து இதுவரை 60 ஆயிரம் மணிப்பூர் மக்கள் மிசோரம், அசாம் மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். ஒன்றிய அமைச்சரே சட்டம் ஒழுங்கு இங்கு இல்லை என கூறும் அளவுக்கு மணிப்பூரின் நிலமை மிக மோசமாக உள்ளது” எனறு கூறினர்கள்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட