சென்னை:
சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியை சேர்ந்தவர் நிசாந்த் (வயது 28) பட்டதாரியான இவருக்கும் வடபழனியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் பள்ளியில் படிக்கும்போதிலேயே பழக்கம் ஏற்பட்டது. இது காதலாக மாறியது. இருவரும் 12 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்தநிலையில் கடந்த 3-ந்தேதி நிசாந்துக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடக்க இருந்தது. இதுபற்றி அறிந்த அவரது காதலி, உடனடியாக விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதில் “காதலன் நிசாந்த், திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி ஏமாற்றிவிட்டார். மேலும் ரூ.68 லட்சம் பணத்தையும் பெற்றுக்கொண்டு திருப்பி தரவில்லை. எனவே நிசாந்த் மற்றும் அவரது பெற்றோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறியிருந்தார்.
இதுபற்றி விசாரணை நடத்திய போலீசார், நிசாந்துக்கு நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர். மேலும் நிசாந்த் மீது போக்சோ, மோசடி உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். திருமணம் நிறுத்தப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டதால் எந்தநேரமும் கைதாகலாம் என்பதால் நிசாந்த் மனவேதனையில் இருந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று நள்ளிரவு நிசாந்த், போரூர் ஏரியில் குதித்து தற்கொலை செய்வதாக “வாட்ஸ் ஆப்” மூலம் நண்பர்களுக்கு தகவல் அனுப்பிவிட்டு மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் போரூர் பகுதிக்கு வந்து பார்த்தபோது நிசாந்தின் கார் போரூர் ஏரிக்கரையில் நின்றது. எனவே அவர் ஏரியில் குதித்து தற்கொலை செய்து இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது.
இதுகுறித்து போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் போரூர் ஏரியில் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் நிசாந்த்தை கண்டு பிடிக்க முடியவில்லை. இதற்கிடையே இன்று காலை நிசாந்த் உடல் போரூர் ஏரியில் கரை ஒதுங்கியது. இதுபற்றி தகவல் அறிந்ததும் போரூர் போலீசார் விரைந்து வந்து நிசாந்த்தின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அவரது தற்கொலை முடிவுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். காதலியை ஏமாற்றிய வாலிபர் போரூர் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்
பாலகுரு தனது வீட்டின் அருகே உள்ள விளைநிலங்களில் அணில் வேட்டையாடுவதற்காக, யூடியூப் வீடியோக்களைப்






