மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் 4 இறைச்சிக் கூடங்களும், ஜெயின் கோவில்களிலிருந்து 100 மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள அனைத்து இறைச்சிக் கூடங்களும் 21.04.2024 அன்று மூடப்பட வேண்டும் என பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி, பொதுசுகாதாரத்துறையின் (கால்நடை மருத்துவப்பிரிவு) கட்டுப்பாட்டில் இயங்கும் 4 இறைச்சிக் கூடங்களும் வருகின்ற 21.04.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அரசு உத்தரவின்படி மூடப்படுகின்றன.
இதேபோல் ஜெயின் கோவில்களிலிருந்து 100 மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள அனைத்து இறைச்சிக் கடைகளும் மூடப்பட்டு, இறைச்சி விற்பனை செய்யப்படுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த உத்தரவினை செயல்படுத்த வியாபாரிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
செய்தி வெளியீடு:
இணை இயக்குநர்/மக்கள் தொடர்பு அலுவலர்
பெருநகர சென்னை மாநகராட்சி