மக்களவையில் நிறைவேறியது யுபிஐ மசோதா: யாருக்கெல்லாம் கட்டணம் வசூலிக்கப்படும்? –

புதுடெல்லி:
எம்.டி.ஆர். எனப்படும் வர்த்தக தள்ளுபடி கட்டணம் என்பது வணிகர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், பொதுமக்களுக்கு இது பொருந்தாது எனவும் தெரிவித்துள்ளார்.
யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு வங்கிகள் கட்டணம் வசூலிக்க அரசு ஒப்புதல் தரும் சட்டத்திருத்த மசோதா, மக்களவையில் நிறைவேறியது. இது சாமானியர்களுக்கு சுமையாக அமையும் என காங்கிரஸ் குற்றம்சாட்டிய நிலையில், அதனை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுத்துள்ளார்.
மாநகரின் மையப்பகுதிகளில் இருந்து மலை கிராமங்கள் வரை பெட்டிக்கடைகளில் ஆரம்பித்து பெரிய பெரிய நிறுவனங்கள் வரை கூகுள் பே, பேடிஎம் உள்ளிட்ட செல்போன் வழி யுபிஐ பண பரிவர்த்தனைகள், நாட்டின் மூலை முடுக்கெங்கும் சென்றுவிட்ட சூழலில், தற்போது அது தொடர்பான மசோதாதான் நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேறி இருக்கிறது.
டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில், 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், யுபிஐ மற்றும் ரூபே டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கான எம்.டி.ஆர். எனப்படும் வர்த்தக தள்ளுபடி கட்டணம் ரத்து செய்யப்பட்டிருந்தது. தற்போது வங்கிகள் மற்றும் பண பரிவர்த்தனை சேவை நிறுவனங்களின் செயல்பாட்டு செலவுகள், தொழில்நுட்ப முதலீடுகள் அதிகரித்திருக்கும் சூழலில், யுபிஐ பரிவர்த்தனைகளுக்கும் வங்கிகள் கட்டணம் வசூலிக்கும் முறை கொண்டு வரப்படுகிறது.
இதற்காக நாடாளுமன்ற மக்களவையில், பண பரிவர்த்தனை மற்றும் தீர்வு அமைப்புகள் சட்டம் 2007, வருமான வரிச்சட்டம் 2025, நிதிச்சட்டம் 2026 ஆகியவற்றில் திருத்தங்களை மேற்கொள்ளும் வகையில், வரி விதிப்பு மற்றும் பிற சட்டங்கள் திருத்த மசோதாவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிமுகப்படுத்தினார்.
வங்கிகளின் இணையதளம் மூலம் ஆன்லைன் பணப் பரிவர்த்தனைக்கு சிறு தொகை கட்டணமாக வசூலிக்கப்படுவதுபோல், கூகுள் பே உள்ளிட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு வங்கிகள் கட்டணம் வசூலிக்க அரசு ஒப்புதல் தர முடியும். அதற்கான வகையில், பண பரிவர்த்தனை மற்றும் தீர்வு அமைப்புகள் சட்டம் 2007-ல் திருத்தங்களை மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த மசோதா மீது விவாதம் நடத்த ஆளுங்கட்சி தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இருப்பினும், எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால், மசோதா விவாதம் இன்றி குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. தனி நபர்களுக்கு இடையிலான பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிப்பது இருக்காது என்றும், நுகர்வோருக்கும் நிறுவனத்திற்கும், ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்திற்கும் இடையேயான பண பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே இந்த மசோதா பொருந்தும் என்றும் பொருளாதார நிபுணர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த திருத்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு இதுவரை கட்டணம் இல்லாமல் இருந்த நிலையை மாற்றுவதாகவும், இதன் சுமை இறுதியில் சாமானிய மக்கள் மீதே விழும் என்றும் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதில் அளித்துள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், எம்.டி.ஆர். எனப்படும் வர்த்தக தள்ளுபடி கட்டணம் என்பது வணிகர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், பொதுமக்களுக்கு இது பொருந்தாது எனவும் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் நிறைவேறியது யுபிஐ மசோதா: யாருக்கெல்லாம் கட்டணம் வசூலிக்கப்படும்? –

புதுடெல்லி:எம்.டி.ஆர். எனப்படும் வர்த்தக தள்ளுபடி கட்டணம் என்பது வணிகர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும்,

விருத்தாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்

சென்னை:விருத்தாச்சலம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பிரேமலதா விஜயகாந்த் சட்டசபையில் பேசுகையில், விருத்தாச்சலத்தை மாவட்டமாக

நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500 என்ற வாக்குறுதி என்னவானது?: எடப்பாடி பழனிசாமி கேள்வி

சென்னை,தமிழக வேளாண் பட்ஜெட் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு அவர்