மதுரை:
மதுரை மேலூர் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.
சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம், தனது மனைவி ரஞ்சனா, ஒன்றரை வயது மகள் பிரனிதா மற்றும் குடும்பத்தினருடன் நெல்லை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது மதுரை மேலூர் அருகே தும்பைப்பட்டி நான்கு வழிச்சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் இருசக்கர வானம் மீது மோதி, சாலையின் மறுபுறம் வந்து கொண்டிருந்த மற்றொரு காரின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான காவல் துறையினர் போக்குவரத்தை சரி செய்து, இடிபாடுகளில் சிக்கிய காரை மீட்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதில், காரில் இருந்த ஸ்ரீராம், அவரது மனைவி ரஞ்சனா, அவர்களது ஒன்றரை வயது குழந்தை பிரனிதா உள்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மேலூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இருமாநில பிரச்சனையை தணித்தது: தமிழகத்தை நோக்கிப் பாய்ந்துவரும் காவிரி!
திருச்சி:காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழை பெய்ததால் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து






