மழை தீவிரம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்ல அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு முதல்வர் உத்தரவு

சென்னை:
சென்னையில் நேற்று இரவு முதல் தொடங்கிய மழை விடிய விடிய மழை கொட்டித் தீர்த்தது. இன்று காலை முதல் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.. இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
தற்போது வங்கக்கடலில் புயல் சின்னம் நாளை மறுநாள் உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னையில் மீனம்பாக்கம், திருவிக நகர், கும்முடிப்பூண்டி, தண்டையார்பேட்டை, அயனாவரம் பகுதிகளில் 50மிமீ மழை பெய்தது. பொன்னேரி, அண்ணா நகர், ராயபுரம், சென்னை துறைமுகம், தேனாம்பேட்டை, கொளத்தூர், பெரம்பூர், நுங்கம்பாக்கம், சோழவரம் பகுதிகளில் 40மிமீ மழை பெய்துள்ளது.
கோடம்பாக்கம், எண்ணூர், மாதவரம், புழல், திருவொற்றியூர், கோடம்பாக்கம், ஐஸ்அவுஸ், மணலி, பெருங்குடி, அடையாறு, மதுரவாயல், கேளம்பாக்கம், ஆலந்தூர், சென்னை விமான நிலையம் அண்ணா பல்கலைக் கழகம் 30மிமீ மழை பெய்துள்ளது. சென்னையில் பல இடங்களில் 1 மணி நேரத்தில் 10 செ.மீ.க்கும் அதிகமான மழை பெய்தது. இது தவிர திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது. 21 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழை கொட்டியது. கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு உடனடியாக அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளை நேரில் செல்வதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அங்கு மழையால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை உடனுக்குடன் சரி செய்யவும், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து, மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளுக்கு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் நேரில் விரைந்துள்ளனர். பொதுமக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளை செய்யும் பணிகளையும் வேகப்படுத்தியுள்ளனர். அதிகாரிகள், ஊழியர்களை ஆயத்த நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தி வருகின்றனர். புகார் மையங்களுக்கு நேரில் சென்று வரக்கூடிய அவற்றை உடனுக்குடன் சரி செய்வதற்கான உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச