மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்

சென்னை:
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்வது உள்ளிட்டவை குறித்து முதல்வர் ஆலோசித்தார். பிறகு கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,
பொதுமக்களின் அபாயத்தை எதிர்கொள்ளும் திறமையை ஏற்படுத்த அரசு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அனைத்து விதமான பேரிடர்களை திறம்பட எதிர்கொண்டு திறன்மிக்க சமுதாயத்தை உருவாக்க அரசு உறுதிபூண்டுள்ளது.
பருவமழை காலத்தில் பாதிப்பு ஏற்படாத வகையில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட சிறப்பு ஏற்பாடுகளால் மழை பாதிப்புகளில் இருந்து மக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.
திமுக அரசு எடுத்த நடவடிக்கைகளால் வெள்ள பாதிப்பு குறைந்துள்ளது. கடந்தாண்டுகளில் ரூ.716 கோடி மதிப்பில் வெள்ள தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆண்டும் சிறப்பாக திட்டமிட்டு பருவமழையை எதிர்கொள்ள வேண்டும். பேரிடர் அபாயங்களை குறைக்க தணிப்பு திட்டங்களை அரசு செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை கொள்கைகளை மேம்படுத்தி அரசு வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு மாநில பேரிடம் மேலாண்மை குழு 3 முக்கிய அம்சங்கள் கொண்டது.
பாதிப்புகளை கண்டறிந்து பேரிடர்களின் சேதத்தை குறைப்பதற்கும் பாதிப்புகளை தவிர்க்கவும் ரூ.716 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அரசின் வெள்ளத் தடுப்பு நடவடிக்கையால் 4,399-ஆக இருந்த பேரிடர் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் 3,770-ஆக குறைந்துள்ளன. பருவமழை பலன்களை அதிகமாக பெற, அதனால் ஏற்படும் இழப்பு, சேதங்களை குறைப்பது அவசியம். நிவாரண முகாம்களில் ஆட்சியர்கள் அனைத்து வசதிகளையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
சென்னையில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாருவதோடு, கரைகளையும் பலப்படுத்த வேண்டும். மழை நீர் வெளியேறும் பாதைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
தமிழகத்திற்கு கிடைக்கும் மழையில் 48 சதவீதம் அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை கிடைக்கிறது. கடந்த கால அனுபவங்களை கருத்தில் கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். பருவமழை பாதிப்புகளை தடுக்க தயாராக வேண்டும்.
சென்னை போன்ற பகுதிகளில் சாலைகள் நிலை மோசமாக உள்ளதாக எனக்கு தொடர்ந்து புகார்கள் வருகின்றன. சாலைகள் சரியில்லாததால் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். சாலைகள் பாதிக்கப்பட்டால் வாகனஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் என்பதால் பணிகளை முடிக்க வேண்டும்.
24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு மையங்களை மக்கள் தொடர்பு கொள்ளலாம். பருவமழை காலத்தில் நோய்த்தொற்று ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார்.
இதில் இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, இ.பெரியசாமி¬, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், மா.சுப்பிரமணியன் மற்றும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, காவல்துறை தலைமை இயக்குனர் சங்கர் ஜிவால், அரசு துறை செயலாளர்கள், துறை தலைவர்கள், காவல்துறை மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை