பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நெகிழிப் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் “மீண்டும் மஞ்சப்பை” குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் விதமாக, மாதவரம் மண்டலம், வார்டு-23க்குட்பட்ட காந்தி பிரதான சாலையில் உள்ள சென்னை நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்களுக்கு மேயர் ஆர். பிரியா இன்று மஞ்சப்பைகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிகழ்ச்சியில், மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சுதர்சனம், கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) சங்கர்லால் குமாவத், வடக்கு வட்டார துணை ஆணையாளர் எம்.சிவகுரு பிரபாகரன், நிலைக்குழுத் தலைவர் (பொதுசுகாதாரம்) கோ.சாந்தகுமாரி, மண்டலக்குழுத் தலைவர் எஸ்.நந்தகோபால், மாமன்ற உறுப்பினர் ப. ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.