சென்னை:
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை எம்.ஜி.ஆர். நகர் அஜந்தா பேருந்து நிறுத்தம் அருகே 3000 குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கலைஞர் நகர் மேற்கு பகுதி திமுக துணைச் செயலாளர் கனிமொழி தனசேகரன் தலைமையில் நடைபெற்றது.
இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும், சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு 3000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
கலைஞர் நகர் தெற்கு பகுதி அவைத் தலைவர் எஸ்.உமாபதி, கலைஞர் நகர் தெற்கு பகுதி நிர்வாகிகள் எஸ்.ரகு, பெ.தியாகு, அ.பாபு ஆகியோர் அனைவரயும் வரவேற்றனர்.
இதில் விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.வி.பிரபாகரராஜா, பெருநகர சென்னை மாநகராட்சி கணக்கு தணிக்கை குழு தலைவர் க.தனசேகரன், கலைஞர் நகர் வடக்கு பகுதி செயலாளர் மு.ராசா எம்.சி, கலைஞர் நகர் தெற்கு பகுதி செயலாளரும், தலைமை பொதுக்குழு உறுப்பினருமான கே.கண்ணன் எம்.சி., தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் உ.துரைராஜ், பி.எஸ்.முருகன் உள்பட ஏராளமான தொண்டர்கள், மக்கள் பங்கேற்றனர்.

வாக்குச்சாவடி மையத்தில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆர்.கே. நகர் மற்றும் பெரம்பூர்





