சென்னை:
சைவ, வைணவ சமயங்கள், பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு வழக்கில், முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான விசாரணை ஆகஸ்ட் 13-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
சைவ, வைணவ சமயங்கள், பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடர்பாக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவர் ஆஜராகாததால் அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை ஜார்ஜ்டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த பிடிவாரண்ட்டை சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் திரும்பப் பெற்றது.
சென்னையில் 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவ, வைணவ சமயங்கள் குறித்தும், பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.
வெறுப்பு பேச்சு பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக, சென்னை மாநகராட்சி கவுன்சிலர் உமா ஆனந்தன், தனிநபர் புகார் மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்று ஜார்ஜ்டவுன் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி பொன்முடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம், தள்ளுபடி செய்து கடந்த ஜூலை 2 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. மேலும், வழக்கை ஆறு மாதங்களில் முடிக்கவும் உத்தரவிட்டிருந்தது.

மக்களவையில் நிறைவேறியது யுபிஐ மசோதா: யாருக்கெல்லாம் கட்டணம் வசூலிக்கப்படும்? –
புதுடெல்லி:எம்.டி.ஆர். எனப்படும் வர்த்தக தள்ளுபடி கட்டணம் என்பது வணிகர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும்,






