அதிமுக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை இலக்கிய அணிச் செயலாளரும், செய்தித் தொடர்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான முனைவர் வைகைச்செல்வன் நேரில் சந்தித்து, துபாய்-ஷார்ஜா ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற 42-வது சர்வதேச புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட்ட, தான் எழுதிய நூல்களான `அங்கம் நிறைந்த சங்கம்’, `மறைந்த தலைவர்கள் மறையாத நினைவுகள்’ ஆகிய நூல்களை வழங்கி வாழ்த்து பெற்றார். (2வது படம்) அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.