தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இன்று நந்தனம், ஓமந்தூரரார் மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் பூந்தமல்லி முதல் வடபழனி வரை செல்லும் மெட்ரோ ரயில் பணிகளை ஆய்வு மேற்கொண்டார். மாலை வேலை என்பதாலும், மக்கள் வேலையை விட்டும், மாணவர்கள், பள்ளி, கல்லூரியில் இருந்து வீட்டிற்கு திரும்புவதாலும் பூந்தமல்லயில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நீண்ட நேரம் வாகனங்கள் நகராமல் அப்படியே நின்றதால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளானார்கள்.








