அண்மை செய்தி
யார் அந்த மேலிடம் டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடியுடன் குழு புகைப்படம் எடுத்து கொண்ட அனைத்து மாநில முதல்வர்கள்..! ஏழைகளின் முன்னேற்றம் என்ற ‘அந்த்யோதயா’ கொள்கையின் அடிப்படையில், தொழிலாளர் சட்டத் தொகுப்புகள், தொழிலாளர் நலனை வலுப்படுத்துகின்றன: மத்திய அமைச்சர் செல்வி கரந்த்லாஜே தோல், காலணி தொழில்துறை வளர்ச்சி குறித்த கலந்துரையாடல் கூட்டம் சென்னையில் நடைபெற்றது தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இன்றைய முதலமைச்சரின் ரசிகையான பெண் ஒருவர் ஆளுங்கட்சி தவெக நிர்வாகிகளால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. ஊடகவியலாளர்கள் செய்திகளின் உண்மைத் தன்மையை அறிந்து

மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காவிட்டால் உச்ச நீதிமன்றத்தை அணுகுவோம் : திமுக அறிவிப்பு…

சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காவிடில் உச்சநீதிமன்றத்தை அணுகுவதை தவிர வேறு வழியில்ல என திமுக அமைப்பு செயலாளர்  ஆர்.எஸ்.பாரதி தெரிவித்து உள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் உச்சத்தை எட்டி உள்ள நிலையில், தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் கட்சிகள் இடையே வெறித்தனமாக கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தானில் நடைபெற் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள சில அறிவிப்புகளை சுட்டிக்காட்டி கடுமையாக விமர்சனம் செய்தார்.

அதோவது,  காங்கிரஸ் கட்சி மக்களிடம் கொள்ளையடித்து, அவர்களின் செல்வங்களை மோசடி செய்வோருக்கு வாரி வழங்கியதாக குற்றம்சாட்டியதுடன்,  நமது நாட்டின்  ‘தாய் மற்றும் சகோதரிகளின் தங்கத்தை எடுத்து நாட்டுக்குள் ஊடுருவியவர்களுக்கு விநியோகம் செய்ய’ காங்கிரஸ் விரும்புவதாக தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில்,  “பழங்குடியின குடும்பங்களில் இருக்கும் வெள்ளி கணக்கிடப்படும். சகோதரிகளுக்கு சொந்தமான தங்கம், சொத்துக்கள் ஆகியவை அனைவருக்கும் சமமாக பகிர்ந்தளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.  இதில் உங்களுக்குச் சம்மதமா? நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த சொத்தைப் பறிமுதல் செய்ய அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது?” என்று பொதுமக்களை பார்த்து கேள்வி எழுப்பினார்.

ஏற்கனவே அவர்களது ஆட்சியில்,   நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை என்று கூறப்பட்டதாக தெரிவித்தவர்,  அதிக குழந்தை பெற்றவர்களுக்கு,  நாட்டில் ஊடுருவியவர்களுக்கு சொத்தைப் பகிர்ந்தளிப்பதில் உங்களுக்குச் சம்மதமா?” என்றவர்,  “தாய்மார்கள், சகோதரிகள் ஆகியோரிடம் இருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அதைப் பற்றிய தகவல்களைப் பெற்று, பின்னர் மன்மோகன் சிங் அரசு ‘சொத்தில் இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை உண்டு’ என்று சொன்னதைப்போல பகிர்ந்தளிப்போம் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கை கூறுகிறது.

சகோதர, சகோதரிகளே, இந்த ‘அர்பன் நக்சல்’ எண்ணங்கள் உங்கள் தாலியைக் கூட விட்டு வைக்காது. அவர்கள் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் செல்வார்கள்,” என்றார்.

பிரதமர் மோடியின் இந்த பேச்சு நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.  காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.  இந்த நிலையில்,  பிரதமர்  மோடி ‘நாட்டில் வெறுப்பு விதைகளை விதைத்து வருவதாகக்’ கூறியுள்ளது. மேலும் மோடி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்துள்ளது.

இந்த நிலையில்,   இன்று செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி,  சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காவிடில் உச்சநீதிமன்றத்தை அணுகுவதை தவிர வேறு வழியில்லை என  தெரிவித்துள்ளார். என்டிஏ கூட்டணி தோல்வியடையப் போவது உறுதி என்பதை தெரிந்ததே என்றும்  தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

யார் அந்த மேலிடம்

யார் அந்த மேலிடம்?” ஸ்ரீவைகுண்டத்தில் விஜயின் ரசிகை தவெக நிர்வாகிகளால் பாலியல் வன்கொடுமை

டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடியுடன் குழு புகைப்படம் எடுத்து கொண்ட அனைத்து மாநில முதல்வர்கள்..!

நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் உரை 📍. “ஒன்றிய அரசுடன் ஆக்கப்பூர்வமான

ஏழைகளின் முன்னேற்றம் என்ற ‘அந்த்யோதயா’ கொள்கையின் அடிப்படையில், தொழிலாளர் சட்டத் தொகுப்புகள், தொழிலாளர் நலனை வலுப்படுத்துகின்றன: மத்திய அமைச்சர் செல்வி கரந்த்லாஜே

தொழிலாளர் சட்ட விதிமுறைகளில் உள்ள இணக்க நடைமுறைகளை  எளிதாக்குதல், தொழிலாளர் நலனை வலுப்படுத்துதல், நவீன, வெளிப்படையான தொழிலாளர்

தோல், காலணி தொழில்துறை வளர்ச்சி குறித்த கலந்துரையாடல் கூட்டம் சென்னையில் நடைபெற்றது

மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சகம், தோல் ஏற்றுமதி கவுன்சில் ஆகியவை இணைந்து நடத்திய ’12 ஆண்டுகால சாதனைகள்: வர்த்தகம், தொழில்துறை

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இன்றைய முதலமைச்சரின் ரசிகையான பெண் ஒருவர் ஆளுங்கட்சி தவெக நிர்வாகிகளால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இன்றைய முதலமைச்சரின் ரசிகையான பெண் ஒருவர் ஆளுங்கட்சி

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 63 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 63

பேட்ரிக் ஐ ஜோசப் அடிகளார் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்

நேற்று இரவு 7:30 மணி அளவில் போரூர் புனித சூசையப்பர் ஆலயத்தின் பங்குத்தந்தை

மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காவிட்டால் உச்ச நீதிமன்றத்தை அணுகுவோம் : திமுக அறிவிப்பு…

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube