அண்மை செய்தி

ரூ.67,452 கோடி மதிப்பிலான 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: முதல்வர் விஜய் முன்னிலையில் கையெழுத்து

சென்னை:
சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில் ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. தமிழக முதல்-வர் ஜோசப் விஜய் தலைமை தாங்கினார். இந்த மாநாட்டில், 97 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
இதன் மூலம் தமிழ்நாட்டிற்கு ரூ.67,452 கோடி தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட உள்ளன. 1 லட்சத்து 6 ஆயிரத்து 998 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக இருக்கின்றன. ஏற்கனவே, கடந்த 3 மாதங்களில் போடப்பட்ட தொழில் முதலீடுகளையும் சேர்த்து, த.வெ.க. அரசு பதவியேற்ற 100 நாட்களில் 104 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.
தொடர்ந்து, ரூ.4,4 கோடியில் 8 புதிய திட்டங்களுக்கு முதல்வர் விஜய் அடிக்கல் நாட்டினார். மேலும் ரூ.2,676 கோடியில் 5 திட்டங்களைத் தொடங்கி வைத்தும், ரூ.777.74 கோடியில் புதிய கட்டடங்களைத் திறந்து வைத்தும், 9 நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வான 20 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கியும் சிறப்பித்தார்.
இதன் மூலம் ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 514 கோடி முதலீடுகள் ஈர்க்கப்படும். 1 லட்சத்து 21 ஆயிரத்து 788 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளன.
தமிழ்நாட்டில் ஹிந்துஜா குழுமம் ரூ.2,500 கோடி முதலீடு செய்கிறது. இதன்மூலம் 500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
அல்ட்ராவயோலெட் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.779 கோடி முதலீடு செய்கிறது. ல்ட்ராவயோலெட் ணிக்ஷி ஆலை கிருஷ்ணகிரியில் அமைகிறது. இதனால் 4,000 பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
டெய்ம்லர் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.4,000 கோடி முதலீடு செய்கிறது. டெய்ம்லர் நிறுவனத்தின் ஆலை காஞ்சிபுரத்தில் அமைக்கப்பட இருக்கிறது.
ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் ரூ.250 கோடி முதலீடு செய்கிறது. லூகாஸ் டிவிஎஸ் நிறுவனம் ரூ.2,500 கோடி முதலீடு செய்கிறது. டைட்டன் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.1,000 கோடி முதலீடு செய்கிறது. செயின்ட் கோபைன் நிறுவனம் ரூ.2,000 கோடி முதலீடு செய்கிறது. ஜே.கே. டயர்ஸ் நிறுவனம் ரூ.5,000 கோடி முதலீடு செய்கிறது. பீனிக்ஸ் கோத்தாரி நிறுவனம் ரூ.1,000 கோடி முதலீடு செய்கிறது.
இந்த வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாடு 2026-ல் ஜெர்மனியை சேர்ந்த டைம்லர் (ஞிணீவீனீறீமீக்ஷீ) நிறுவனத்துடன் மிக முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்காவில் இயங்கி வரும் தனது 400 ஏக்கர் பரப்பிலான உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி மையத்தை ரூ.4,000 கோடி முதலீட்டில் மேம்படுத்தவுள்ளது. இதன் மூலம் வணிக வாகனங்களின் வடிவமைப்பு, ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் உற்பத்திப் பணிகள் விரிவுபடுத்தப்படுவதோடு, 400 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட உள்ளன
சென்னையில் நடைபெற்ற வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாடு 2026-ல், ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆவிட் குழுமம் முக்கியப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டது. அடுத்த 5 ஆண்டுகளில் நகர்ப்புற உள்கட்டமைப்பு, சுற்றுலா, சுகாதாரம் மற்றும் சுரங்க உபகரண உற்பத்தித் துறைகளில் களமிறங்கும் இந்நிறுவனம், முதற்கட்டமாக ரூ.7,000 கோடி முதலீட்டில் திருவள்ளூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் திட்டங்களை செயல்படுத்தி 12,000 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கவுள்ளது.
அக்னிகுல் காஸ்மோஸ் ரூ.400 கோடி முதலீடு செய்துள்ளது. இதன் மூலம்- 1,500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். ஷைலி இன்ஜினீயரிங் ப்ளாஸ்டிக்ஸ்- ரூ.500 கோடி முதலீடு, ‘அல்ட்ரா வெயலட்’ நிறுவனம் ரூ.779 கோடி முதலீடு செய்துள்ளது. இதன் மூலம் – 4,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும.
சூப்பர் மைக்ரே நிறுவனம் ரூ.477 கோடி முதலீடு செய்துள்ளது. இதன் மூலம்- 150 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். சீரிரி ஜப்பான் நிறுவனம் ரூ.1,651 கோடி முதலீடு – 4,316 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகவுள்ளது.

சபாநாயகர் ஓம் பிர்லா வழங்கிய தேநீர் விருந்தில் கனிமொழி எம்.பி. பங்கேற்பு; அரசியலில் புதிய பரபரப்பு

புதுடெல்லி,நாடாளுமன்றத்தில் சபாநாயகர் ஓம் பிர்லா வழங்கிய தேநீர் விருந்தில் திமுக சார்பில் கனிமொழி

மதுரையை தாக்கும் வெப்பத்தீவு பாதிப்பு; ‘பசுமை மதுரை செயல் திட்டம்‘ தீட்ட நீதிமன்றத்தில் மனு

மதுரை:மதுரையில் அதிக வெப்ப அபாயம் உள்ளதாக ஆக்ஸ்போர்டு ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.. இந்நிலையில்,

மகன் இறப்பில் மர்மம், தனது படம் மார்பிங்… நீதி கேட்டு போராடும் பெண் செய்தியாளர்

சென்னை:நாளைய தீர்ப்பு செய்தியாளர் கயல்விழி அளித்துள்ள செய்தியில். கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து

கணக்கெடுப்புப் பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும்: – சென்னை மாநகராட்சி ஆணையாளர்

சென்னை:சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வீட்டுப்பட்டியல் கணக்கெடுப்புப் பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர