வடசென்னையில் பெருமழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுவிஸ் தமிழர்கள் துயர் துடைப்புப் பொருட்கள் வழங்கினர்!

சென்னை
மிச்சாங் புயல் காரணமாக ஏற்பட்ட பெருமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டு, பலராலும் கவனிக்கப்படாமல் விடப்பட்ட பகுதி வடசென்னையாகும். ஏழை எளிய மக்கள் நிறைந்து வாழும் வடசென்னையின், புளியந்தோப்பு பகுதியிலுள்ள குருசாமி நகர், ராஜா தோட்டம், கே.எம். கார்டன் போன்ற இடங்களில், மழை நீர் கழுத்தளவு தேங்கிய நிலையில், அங்கு மக்கள் உணவு – குடிநீர் கூட கிடைக்காமல் கடும் இன்னல்களை எதிர்கொண்டனர். அப்பகுதியில் அரசும் உடனடியாக மீட்பு மற்றும் துயர் துடைப்புப் பணிகளில் இறங்காத நிலையில், மக்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.

தற்போது தான் சில நாட்களுக்கு முன்பு வெள்ள நீர் வடிந்த நிலையில், அங்கு குப்பைகளைக் கூட அரசு இன்னும் அகற்றாமல் உள்ளது. கழுத்தளவு தண்ணீர் தேங்கிய வீடுகளில், தங்கள் உடைமைகளை எல்லாம் இழந்து தவிக்கும் மக்கள் எவ்வித துயர் துடைப்புப் பணியும் நடைபெறாத நிலையில், விரக்தியில் உள்ளனர்.

இதுகுறித்து அறிந்து, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் அப்பகுதியில் துயர் துடைப்புப் பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 10.12.2023 அன்று, அப்பகுதியில் மக்களுக்கு அரிசி, போர்வை, நாப்கின் போன்ற அடிப்படைப் பொருட்கள் வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து, நேற்று (12.12.2023), சுவிட்சர்லாந்து வாழ் ஈழத்தமிழர்களின் பங்களிப்பில்-“உலக இந்து ஆன்மிகக் கூட்டமைப்பு”(World Spiritual Tamil Hindu Federation – WSTHF) சார்பில், ஜி.கே.வேலுப்பிள்ளை கணேசக்குமார் 150-க்கும் மேற்பட்ட ஆண்கள் – பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான உடைகள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. தமிழ்த்தேசியப் பேரியக்கத் துணைப் பொதுச் செயலாளர் க.அருணபாரதி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் வெற்றித்தமிழன் ஆகியோர் உடனிருந்தனர். அப்பகுதி சமூக ஆர்வலர் ஜீவா மற்றும் இளைஞர்கள் நிகழ்வை ஒருங்கிணைத்தனர். தொடர்ந்து, துயர் துடைப்புப் பொருட்கள் வழங்கும் பணிகளை ஒருங்கிணைக்க திட்டமிடப்பட்டு வருகிறது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.