வாக்குச்சாவடிகளில் மிரட்டல் மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் : மணிப்பூர்

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் ஓராண்டாக நீடித்து வரும் கலவரத்தில் 200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த கலவரம் இன்னும் முழுமையாக ஓயாததால் மாநிலத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. இந்த நிலையில் நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளில் கடந்த 19-ந்தேதி முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் மணிப்பூரை பொறுத்தவரை, அங்குள்ள உள் மணிப்பூர் மற்றும் வெளி மணிப்பூர் ஆகிய 2 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த வாக்குப்பதிவின்போது குறிப்பிட்ட சில வாக்குச்சாவடிகளில் மிரட்டல் மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சேதப்படுத்திய சம்பவங்களும் அரங்கேறின. இது தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து. மொத்தம் 47 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டுமென மணிப்பூர் காங்கிரஸ் தலைவர் கே.மேகசந்திரா மனு அளித்தார்.

இந்நிலையில், மணிப்பூரில் வரும் 22-ந்தேதி(நாளை) 11 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த 11 வாக்குச்சாவடிகளிலும் கடந்த 19-ந்தேதி நடைபெற்ற வாக்குப்பதிவு செல்லாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மணிப்பூரில் முதற்கட்ட தேர்தலில் 72 சதவிகித வாக்குகள் பதிவாகி இருந்தது. குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை