அண்மை செய்தி
உலக புகழ்பெற்ற தூத்துக்குடி பரிசுத்த பனிமய அன்னை பேராலய 444-ம் ஆண்டு பெருவிழா சிவகங்கை அருகே 40 வயது நபருக்கு நேர்ந்த கொடூரம் தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கல்வி அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் – மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை

விவசாயிகளுக்கு வெளிநாட்டில் பயிற்சி… மாணவர்களுக்கு பண்ணை சுற்றுலா: பட்ஜெட்டில் அசத்தல்

சென்னை:
தமிழக சட்டப்பேரவையில் 2023-24ம் ஆண்டுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது .அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகளை கீழே காண்போம்…

*வேளாண்மை தோட்டக்கலை பட்ட படிப்பு முடித்த பட்டதாரிகள், தொழில்முனைவோராக தலா 2 லட்சம் நிதி உதவி வழங்க 4 கோடி நிதி ஒதுக்கீடு

*விவசாயத்தில், ரசாயனம், உர பயன்பாட்டை குறைத்து, இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க 32 மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.26 கோடி ஒதுக்கீடு

*இயற்கை உரங்களை தயாரிக்க 100 குழுக்களுக்கு 1 லட்சம் வீதம் வழங்க, ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு

*வேளாண் உற்பத்தி, கொள்முதல் உள்ளிட்டவற்றிக்காக, 37 மாவட்டங்களில் பணம் இல்லா பரிவர்த்தனையை விரிவுபடுத்த திட்டம்

*பல்வேறு துறைகளின் திட்டப் பலனை விவசாயிகள் ஒரே இடத்தில் பெற உதவும் வகையில், ஒரு தளம் ஒரு பயன் திட்டம் அமல். 13-க்கும் மேற்பட்ட துறைகளின் திட்டப் பலன் இந்த இணைய தளம் மூலம் கிடைக்கும்

*உழவர் நலன்சார்ந்த தகவல்களை கணினி மயமாக்கி நிக்ஷீணீவீஸீs (ளிஸீமீ ஷிtஷீஜீ ஷிஷீறீutவீஷீஸீ) இணையதளம் அறிமுகம்

*எண்ணெய் வித்து உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், சூரிய காந்தி, நிலக்கடலை, எள், சோளப் பயிர் சாகுபடியை பரவலாக்க ரூ.33 கோடி ஒதுக்கீடு

*எண்ணெய் வித்து விதைகள், மற்றும் உற்பத்தி கொள்முதலுக்காக, சிறப்பு மண்டலம் உருவாக்கப்படும்.

*உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.ளி 3 அல்லது 4 கிராமங்களுக்கு தலா, ஒரு வேளாண் விரிவாக்க அலுவலர் நியமனம்
4311 வேளாண் விரிவாக்க அலுவலர்கள் 4 கிராமங்களுக்கு ஒருவர் என நியமிக்கப்பட்டு திட்டத்தை செயல்படுத்துவர்

*விவசாயிகளுக்குத் தேவையான தொழில்நுட்பங்கள், திட்ட பயன்கள் குறித்த விவரங்களை எடுத்துச் செல்ல உழவர் அலுவலர் தொடர்பு திட்டம்

*கரும்பு டன்னுக்கு ரூ.2751 கொடுக்கப்பட்டது; சிறப்பு ஊக்கத்தொகை கூடுதலாக ரூ.195 சேர்க்கப்பட்டு வழங்கப்படும்; இதற்காக, ரூ.253 கோடி நிதி ஒதுக்கீடு. கரும்பு கொள்முதலுக்கான சிறப்பு ஊக்கத் தொகை மூலம் 1.50 லட்சம் கரும்பு விவசாயிகள் பலன் பெறுவர்

*தக்காளி ஆண்டு முழுவதும் சீராக கிடைக்க ரூ.19 கோடி; வெங்காயம் ஆண்டு முழுவதும் கிடைக்க ரூ.29 கோடி நிதி ஒதுக்கீடு

*பேரீட்சை, அத்தி உள்ளிட்ட சிறப்பு தோட்டக் கலை பயிர்களை உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்
1000 ஹெக்டேரில் சாகுபடி செய்ய பயிற்சி; ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

*டிராகன் ஃபுரூட், அவகேடா, லிச்சி போன்ற பழங்களின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் 1,000 ஹெக்டேரில் சாகுபடிக்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

*ரூ. 15 கோடி மதிப்பீட்டில் 10 லட்சம் வேளாண் குடும்பங்களுக்கு பேரீட்சை, டிராகன் ஃபுரூட், அவகோடா, அத்தி பழ சாகுபடி பயிர்கள் வழங்கப்படும்.

*கடலூர், கன்னியாகுமரி உள்ளிட்ட 21 மாவட்டங்களில் பலா சாகுபடியை உயர்த்த ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு. 5 ஆண்டுகளில் 2,500 ஹெக்டேரில் பலா சாகுபடியை உயர்த்த இலக்கு நிர்ணயம். பண்ருட்டி பலாவிற்கு ஒருங்கிணைந்த தொகுப்பு அமைத்து பகுதிகளுக்கு ஏற்ப பலா ரகங்கள் அறிமுகம் செய்யப்படும். பலா தொடர்பான பன்னாட்டு கருத்தரங்கு நடத்தப்படும்.

*உடலுக்கு தேவையான புரதச்சத்தை வழங்கும் பயறு வகைகளின் பரப்பளவையும், உற்பத்தியையும் அதிகரிக்க ரூ.30 கோடி மதிப்பில் திட்டம்.

*கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை ஆகிய 4 இடங்களில், ரூ.18 கோடி நிதியில் துவரை மண்டலம் அமைக்கப்படும்.

*நூற்பாலைகளுக்கு தேவையான பஞ்சை தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் வகையில் ரூ.12 கோடி நிதியில் பருத்தி இயக்கம்

*பயிர் சாகுபடி முதல் விற்பனை வரையிலான, தொழில்நுட்பம் பற்றிய சந்தேகங்களை விவசாயிகளுக்கு விளக்க வேளாண் விஞ்ஞானிகள் திட்டம்.

*7 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் உள்ள கரும்பு தளங்கள் சிமெண்ட் தளங்களாக அமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு.

*சேலம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில், கழிவு மண்ணிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட இயற்கை உரங்கள் தயாரிக்க ரூ.3 கோடி நிதி.

*குறைந்த சாகுபடி செலவில் அதிக மகசூல் எடுக்க, கரும்பு சாகுபடி மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு.

*முருங்கை ஏற்றுமதி மண்டலம் அமைத்து 1,000 ஹெக்டரில் முருங்கை சாகுபடியை உயர்த்திட ரூ.11 கோடி ஒதுக்கீடு.

*கரூர், தேனி, திண்டுக்கல், தூத்துக்குடி, அரியலூர், மதுரை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கி முருங்கை ஏற்றுமதி மண்டலம்.

*1,000 ஹெக்டேரில் சௌ சௌ, பட்டாணி, பீன்ஸ் போன்ற குளிர்கால காய்கறிகளின் சாகுபடிக்கு மானியமாக ரூ.2.5 கோடி ஒதுக்கீடு.

*தண்ணீர் பற்றாக்குறையுள்ள பகுதிகளில் 53,400 ஹெக்டேர் நுண்ணீர் பாசனம் நிறுவ மானியமாக ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு.

*பாதுகாக்கப்பட்ட சாகுபடி முறையை பரவலாக்க ரூ.22 கோடி நிதி ஒதுக்கீடு.

*வெளிநாட்டு தொழில்நுட்பங்களை அறிந்து கொண்டு தமிழ்நாட்டில் பின்பற்றும் வகையில், விவசாயிகள் வெளிநாட்டில் பயிற்சி பெற ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு.

*வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், மா, கொய்யா, பலா, சீதாப்பழம் போன்ற பழச்செடி தொகுப்புகள் வழங்கத் திட்டம்.

*ஒவ்வொரு கிராமங்களிலும் தலா 300 வேளாண் குடும்பங்களுக்கு பல்லாண்டு பழச்செடி தொகுப்புகள் வழங்க, ரூ15 கோடி நிதி ஒதுக்கீடு.

*ஏற்காடு தாவரவியல் பூங்கா, மாதவரம் தோட்டக்கலைப் பூங்காவில், தலா ரூ.5 கோடியில், அலங்காரங்கள் அமைப்பு.

*பள்ளி மாணவ, மாணவிகளிடம் வேளாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பண்ணை சுற்றுலா அறிமுகம்; ரூ.1 கோடி நிதி.

*உலக சந்தையில் தேனி வாழைக்கு தனி அடையாளம் உருவாக்கிட ரூ.130 கோடியில் தனித்தொகுப்பு.

*வேளாண் பணிக்கான வேலை ஆட்கள் தட்டுப்பாட்டை போக்க வேளாண் இயந்திரங்கள் பயன்பாடு அதிகரிக்கப்படும்.

*பல்வேறு வேளாண் பணிகளுக்கு பயன்படும் இயந்திரங்களை மானியத்தில் வழங்க ரூ.125 கோடி ஒதுக்கீடு.

*வேளாண் இயந்திரங்களை கிராமங்களிலேயே பழுது பார்க்க 200 ஊரக இளைஞர்களுக்கு ரூ.50 லட்சம் செலவில் பயிற்சி.

*தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் உட்பட வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்படும்.

*மாவட்டங்கள் தோறும் விதை திருவிழா கருத்தரங்கு, மீட்டெடுத்த விவசாயிகளுக்கு பரிசு தொகை வழங்க திட்டம்.

*வரும் ஆண்டில் ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த திட்டம்.

*முந்திரி சாகுபடி வரும் ஆண்டு கூடுதலாக 550 ஹெக்டேர் அதிகரிக்க திட்டம்.
உயர் விளைச்சல் ரக முந்திரி செடிகளை 500 ஹெக்டரில் நடவு செய்ய நடவடிக்கை

*பனை சாகுபடியை அதிகரிக்க 10 லட்சம் பனை விதைகள் வழங்கப்படும் என அறிவிப்பு.
விவசாயிகளுக்கு பனை மதிப்பு கூட்ட பாதுகாப்பு உபரகணங்கள்,கொட்டகை அமைக்க நிதி உதவி.

*தூத்துக்குடி மாவட்டம் கிள்ளிகுளத்தில் ரூ.15 கோடியில் பனை ஆராய்ச்சி நிலையம்
பனை மேம்பாட்டுத் திட்டம்.

*பனை சாகுபடியினை ஊக்குவித்து பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.

*வைகை, மேட்டூர் அணைகளை மேம்படுத்தி பராமரிக்க, ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு .

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின்

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கல்வி அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் – மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இன்று கடமை மாளிகையில் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை

விவசாயிகளுக்கு வெளிநாட்டில் பயிற்சி… மாணவர்களுக்கு பண்ணை சுற்றுலா: பட்ஜெட்டில் அசத்தல்

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின்

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கல்வி அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் – மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இன்று கடமை மாளிகையில் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை