சென்னை பெசன்ட்நகர் மற்றும் வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா நாளை கொடியேற்றம்

நாகப்பட்டினம்:
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா நாளை (ஆகஸ்ட் 29-ம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம் 8-ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகின்றது.
இந்த திருவிழாவிற்காக பல்வேறு நாடுகள், மாநிலங்கள், மாவட்டங்கள், ஊர்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நடை பயணமாகவும் வருகை புரிவதால் திருச்சி-நாகை சாலையில் இரவு நேரங்களில் போலீஸாரின் ரோந்துப்பணி அதிகப்படுத்தப்பட்டிருக்கின்றது.
பல்லாயிரக்கணக்கானோர் வேளாங்கண்ணி வருவதால் நாகப்பட்டினம் முழுவதும் பலத்த பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த தாலுக்கா, ஆயுதப்படை மற்றும் சிறப்பு காவல் படையை சேர்ந்த சுமார் 1,800 காவலர்களும், 200 ஊர்காவல் படையினரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
மேலும் 27 உயர் கண்காணிப்பு கோபுரம், 4 ஆளில்லா விமானம் (Drone Camera), 760 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணி தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு முன்னேற்பாடுகளையும், பாதுகாப்பு பணிகளையும் நாகை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகின்றது.
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு ஏதுவாக வேளாங்கண்ணி ஆர்ச் அருகில் ஒரு தற்காலிக பேருந்து நிறுத்தமும், மேரிஸ் கார்னர் பகுதியில் ஒரு தற்காலிக பேருந்து நிறுத்தமும் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 750 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
வேளாங்கண்ணி பெருவிழாவினை முன்னிட்டு தென்னக ரயில்வே நிர்வாகமும் சிறப்பு ரயில்களை இயக்கவிருக்கின்றன. கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு நாளை துவங்கும் பெருவிழாவில் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டிருக்கின்றது. இதனால் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, பிரான்சு உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் பக்தர்கள் திரளாக பங்கேற்கவிருக்கின்றனர்.
விழாவை முன்னிட்டு சென்னை பெசன்ட்நகரில் அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத்திலும் நாளை கொடியேற்றம் செய்யப்பட உள்ளது. இதில் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வருகை தர உள்ளனர். இதனால் பாதுபாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஷெட்யூல்டு வகுப்பினருக்கான நலத்திட்டங்களின் செயலாக்கத்தை டிஜிட்டல் மயமாக்கி வலுப்படுத்துவதற்கு ஏதுவாக, ‘பிஎம்-அஜய்’ இணையதளம், ‘அஜய்’ செயலியை மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார்

பிரதமரின் ஷெட்யூல்டு வகுப்பினருக்கான மேம்பாட்டுத் திட்டம் (பிஎம்-அஜய்) திட்டத்தை விரைவாகவும், தரமாகவும் செயல்படுத்தும் நோக்கில், இதற்கான இணையதளம் மற்றும் செயலியைமத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார். இத்திட்டம், காகிதப் பயன்பாடற்ற முறையில், முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட, நிகழ்நேர அடிப்படையிலான பணி, அமலாக்க நடைமுறைக்கு மாறுவதை இலக்காகக் கொண்டுள்ளது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், இணையமைச்சர் திரு. பி.எல். வர்மா, செயலாளர் திரு. சுதான்ஷ் பந்த், மத்திய சமூக நீதித் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளின் முன்னிலையில், ‘பிஎம்-அஜய்’ இணையதளம் மற்றும் ‘அஜய்’ செயலியைத் தொடங்கி வைத்தார். அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த செயலாளர்கள், மூத்த அதிகாரிகள்  இணையவழியாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்