அக்ரூட் சாப்பிட்டால் உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன?

நீங்கள் தினமும் வால்நட் அல்லது அக்ரூட் பருப்புகளை எதற்காக சாப்பிட வேண்டும் என்பதற்கான காரணங்கள் பற்றி அறிந்துக்கொள்ளுங்கள். அக்ரூட் பருப்புகள் உங்கள் உணவில் நீங்கள் சேர்த்துக் கொள்ள கூடிய மிகவும் சத்தான உணவுகளில் ஒன்றாகும். இதில் ஆரோக்கியம் நிறைந்த கொழுப்புகள், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. அக்ரூட் பருப்பில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. ஆகையால், இது ஒமேகா -3 கொழுப்பின் ஓர் வளமான மூலம் ஆகும். அக்ரூட் பருப்பு சில அற்புதமான ஆரோக்கிய நன்மைகளுடன் வருகிறது. மனிதனால் வளர்க்கப்படும் பழமையான மர உணவுகளில் அக்ரூட் பருப்புகளும் ஒன்றாகும். மேலும் அவற்றின் முக்கியத்துவம் 7000 பி.சி. யில் இருந்து கண்டறியப்பட்டு வருகின்றது.

​வால்நட்: இன்றைய கால கட்டத்தில், உணவுக் கட்டுப்பாடுகள் மற்றும் பல தவறான கருத்துக்கள் காரணமாக, அக்ரூட் பருப்பு சாப்பிடுவதைத் மக்கள் தவிர்க்கிறார்கள். அதாவது, அக்ரூட் பருப்பு கலோரி நிறைந்தவை மற்றும் இயற்கையில் கொழுப்பு இதில் அதிகம் உள்ளது என்று கருதி, மக்கள் இதை சாப்பிடுவதைத் தவிர்த்து வருகின்றனர்.

இருப்பினும், அக்ரூட் பருப்புகள் ஊட்டச்சத்தில் மிகுதியாக உள்ளது என்பதை நம்மால் மறுக்க முடியாது. மேலும் இது வளர்சிதை மாற்றம் , இதய ஆரோக்கியம், மற்றும் அழகு போன்ற அனைத்திற்கும் நமக்கு நன்மை அளிக்கக்கூடியது. ஆரோக்கியமான உணவின் ஒரு பகுதியாக அக்ரூட் பருப்புகளை அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான 13 காரணங்கள் கீழே உங்களுக்காக கொடுக்கப்பட்டு உள்ளது அவற்றை படித்து தெரிந்து கொள்ளுங்கள்:

​எடை இழப்பு: மக்கள் நம்புவதற்கு மாறாக, அக்ரூட் பருப்புகள் எடை மேலாண்மை உணவில் ஒரு பகுதியை உருவாக்குகிறது என்று கூறப்படுகிறது. அக்ரூட் பருப்புகளை வழக்கமாக உட்கொள்வது எடை அதிகரிப்பு அல்லது உடல் பருமனை ஏற்படுத்த வாய்ப்பில்லை என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உண்மையில், ஒரு அவுன்ஸ் அக்ரூட் பருப்புகளில் 2.5 கிராம் ஒமேகா 3 கொழுப்புகள், 4 கிராம் புரதம் மற்றும் 2 கிராம் நார்ச்சத்து ஆகியவை அடங்கி உள்ளன.

எந்தவொரு வெற்றிகரமான எடை மேலாண்மை திட்டத்திலும் திருப்திகரமான காரணி இருக்க வேண்டும்; எனவே நீங்கள் எடை மேலாண்மை திட்டத்தில் இருக்கிறீர்களா என்பதைக் கருத்தில் கொள்ள வால்நட் சந்தேகத்திற்கு இடமின்றி சரியான உணவாக இருக்கின்றது. கலோரிகளில் இது அதிகமாக இருந்தாலும், எடை இழப்பு என்று வரும் போது அக்ரூட் பருப்புகள் ஒரு முக்கியமான கருவியாக இருந்து உங்களுக்கு உதவும்.

தூக்கத்தைத் தூண்டுகிறது: அக்ரூட் பருப்பில் மெலடோனின் எனப்படும் ஒரு கலவை உள்ளது. இதற்கு ஒளியின் சுழற்சி மற்றும் இருண்ட சுழற்சி தொடர்பான செய்திகளை உடலுக்கு அனுப்பும் பொறுப்பு உள்ளது. மெலடோனின் ஏற்கனவே உடலால் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளதால், அக்ரூட் பருப்புகள் உட்கொள்வது மெலடோனின் இரத்த அளவை அதிகரிக்கிறது. இதனால் இது தூக்கத்தைத் தூண்டுகிறது. அதனால் தான் அக்ரூட் பருப்புகள் சாப்பிடுவது தூக்கத்தை மேம்படுத்த ஒரு சிறந்த வழியாகும் என்று சொல்லப்படுகிறது.

நீரிழிவு நோயைத் தடுக்கிறது: அனைத்து வகையான கொட்டைகளும் நீரிழிவு நோயைக் குறைக்கும் அபாயத்துடன் தொடர்புடையது. அக்ரூட் பருப்புகள் இதற்கு விதிவிலக்கல்ல. ஒரு ஆய்வின்படி, வாரத்திற்கு இரண்டு முறை 28 கிராம் அக்ரூட் பருப்புகளை உட்கொண்ட பெண்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு 24% குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆய்வு ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்டது. மேலும், இந்த ஆய்வு பெண்கள் மீது நடத்தப்பட்டாலும், இதன் நன்மைகள் ஆண்களுக்கும் அதே மாதிரி தான் இருக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

தினசரி ஏற்படும் மன அழுத்தம் உங்கள் உடல் நலத்தை பாதிக்கக்கூடும். இது போன்ற சமயத்தில் நீங்கள் அக்ரூட் பருப்புகளை சாப்பிடுவதற்கான சரியான நேரம் இது. ஏனெனில், அவை மன அழுத்தத்தை எதிர்த்துப் போராட உதவுகின்றன என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. உணவில் அக்ரூட் பருப்புகள் மற்றும் வால்நட் எண்ணெய் உள்ளிட்டவை ஓய்வெடுக்கும் இரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்தத்திற்கான இரத்த அழுத்த பதில்கள் ஆகிய இரண்டையும் குறைக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். அக்ரூட் பருப்புகள் நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள் (ஆன்டி ஆக்சிடன்ட்ஸ்) மற்றும் நிறைவுறா கொழுப்பு அமிலங்கள், குறிப்பாக ஆல்பா லினோலெனிக் அமிலம், ஒமேகா -3 கொழுப்பு அமிலம் நிறைந்த ஓர் மூலம் ஆகும். இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்தும், மன அழுத்த சண்டை பண்புகளை அக்ரூட் பருப்புகளுக்கு வழங்குகிறது. ஆகவே அதிக நன்மைகள் உள்ள இந்த அக்ரூட் பருப்பை நாம் தினமும் சாப்பிட்டால் எற்படும் நன்மைகள் அளவில்லாதது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அக்ரூட் சாப்பிட்டால் உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன?

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.