திருக்குறள் உண்மை உரை வழி திருக்குறள் அறத்துப்பால் அதிகாரம் 25 ‘அருளுடைமை’ (தொடர்பு கருதாமல் எல்லாரிடத்திலும் இரக்கம் காட்டுதல்)
குறள் 249: “தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்”
பொருள்:அருள் பூணாதவன் செய்கின்ற அறத்தின் தன்மை யை ஆராய்ந்தால் அது தெளிந்த அறிவில்லாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் காணுதல் போன்றது” எனப்படுகிறது. அப்படியே திருமறையும் மத்தேயு 23: 24ல் “குருடரான வழிகாட்டிகளே, கொசுயில்லாதபடி வடிகட்டி, ஒட்டகத்தை விழுங்குகிறவர்களாயிருக்கிறீர்கள்.” என்றும், யாக்கோபு 3: 17ல் “பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது.” என்றும்
திருக்குறளும் திருமறையும் அருளுடைமை(தேவன்பு)எனும் இரக்க குணத்தை ஒரேவிதமாய் வலியுறுத்தப் படுவதை அறியலாம்.இவண் பேராசிரியர் இறைமொழியன் லூர்துசாமிu திருக்குறள் உண்மை உரை பேரவை







