உடல், உயிர், ஆன்மா இவற்றின் பங்கு உயிரினங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இவற்றில் ஒன்றுக்கு பிரச்சனை என்றாலும் செயல்பாடு அற்றநிலையே… இவை பற்றி காண்போம்:
உடலின் பணி
நம்முடைய விருப்பத்தின்படி செயல்படுவதற்கு நம்முடைய உடல் நமக்குத் துணையாக இருக்கிறது. உடல் இல்லாமல் நாம் நம்முடைய விருப்பத்தைச் செயல்படுத்த இயலாது. நம்முடைய செயல்பாடுகளுக்கு நம்முடைய உடல் உறுப்புகளே துணையாக இருக்கின்றன.
கண் இல்லாதவன் பார்க்க முடியாது. காதில்லாதவன் கேட்க முடியாது. கால், கை இல்லாதவன் நடக்கவோ, எதையும் பிடிக்கவோ இயலாது. இதைப் போன்றே மற்ற உறுப்புகளும பயன்படுகின்றன.
உயிரின் பணி
உயில் இல்லாவிட்டால் நம்முடைய உடல் உறுப்பின் பணிகள் அனைத்தும் நின்றுவிடும். நம்முடைய உடல் நமக்குப் பயன்படாது. நம்முடைய உடல் உறுப்புகள் நமக்குப் பயன்படும்படியாக அவற்றை அழியாமல் பாதுகாப்பதே உயிரின் வேலையாகும். அது தன் வேலையைத் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறது. அது தன் பணியை நிறுத்தும்பொழுது உடல் அழியத் தொடங்கிவிடும்.
நம்முடைய உடல் உறுப்புகளாகிய இதயம் துடித்து நம்முடைய உடலின் ரத்த ஓட்டத்தைச் சீராக வைத்துக் கொள்ளுவதும், நம்முடைய நுரையீரல் ரத்தத்தைச் சுத்தமாக்கி அதற்குப் பிராண வாயு கொடுப்பதும், நாம் உண்ட உணவு செரித்து இரத்தத்தோடு சேர்வதற்குப் பணியாற்றும் உள்ளுறுப்புகளும் நம் விருப்பப்படி செயல்படுகின்றவை அல்ல. நாம் விரும்பி இதயத்தை வேகமாகத் துடிக்க வைக்கவோ அல்ல. உணஒவுல செரிக்காமல் நிறுத்தி வைக்கவோ நம்மால் இயலாது. அது நம் உயிரின் பணி ஆகும். உடலை அழியாமல் பாதுகாப்பதே உயிரின் பணியாக இருக்கின்றது.
நமக்குப் பயன்படும் நம்முடைய உடல் உறுப்புகளை அழியாமல் பாதுகாக்கும் கடமை நம்முடைய உயிரைச் சார்ந்தது. நம்முடைய உடலில் உயிர் இக்கும் வரை நம்முடைய உடல் உறுப்புகளை நம் விருப்பதற்குப் பயன்படுத்தலாம். நம் உடலிலிருந்து உயிர் நீங்கிய பின்னர் நம்முடைய உடல் அழிகின்ற காரணத்தால் அதை விட்டுச் செல்வதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை.
ஆன்மா (உள்ளம், மனது)
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐம்பெரும் பூதங்கள் உடல் உருவாகக் காரணமாக இருக்கின்றன. உடலையும், உயிரையும் உடைய உயிரினங்ள் ஒன்று முதல் ஐந்து வரையிலான அறிவுள்ள உயிரினங்களாகப் பிரிக்கப்படுகின்றன.
உடல், உயிரோடு, உள்ளம் என்ற சிறப்பான ஒன்றையுடைய மனிதன் மட்டுமே ஆறறிவு உயிரினமாகத் தனித்துச் சிறந்து நிற்கின்றான். அவனுடைய உடலில் உயிரும் செயல்படுகின்றது. உள்ளமும் செயல்படுகின்றது என்பதை நாம் அறிகின்றோம். உள்ளம் என்பதன் மறு பெயரே ‘ஆன்மா’ என்பதாகும். சமய உடலகம், தத்து உலகம், ஆன்மீக உலகம் ஆகியவை மனிதனை உடல், உயிர், உள்ளம் (Body, Life or Spirit and Soul) என மூன்றாகப் பிரித்து விளக்குவதற்கு முயற்சி எடுக்கின்றன.
நம்மை நாம் சரியாக அறிந்துகொள்ள வேண்டுமானால் நம்முடைய உடலைப் பற்றியும், உள்ளத்தைப் பற்றியும் நாம் சரியாகப் பிரித்து, அறிந்து உணர்ந்திருக்க வேண்டும்.
தொடரும்…






