உயர்நீதிமன்ற ஆணைப்படி கச்சதீவு திருப்பயணத்திற்கு கட்டணம் வசூலித்து மீன்பிடி விசைப்படகில் அழைத்துச் செல்வதை தடை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்புகோரிக்கை.
கிபி 1905 ஆம் ஆண்டு கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயம் தமிழக மீனவர்களால் கட்டப்பட்டு திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. கச்சத்திவு திருவிழாவிற்கு பாரம்பரிய மீனவர்கள் நாட்டுப் படகில் தங்கள் குடும்பங்களையும் உறவினர்களையும் அழைத்துக் கொண்டு பாதுகாப்பான முறையில் திருப்ப பயணம் சென்று வந்தனர். இலங்கை மீனவர்கள் உறவினர்களாக திருவிழாவிற்கு வந்து கலந்து கொள்வார்கள். இருநாட்டு மீனவர்களின் நட்புறவு சின்னமாக கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா நடைபெற்று வந்தது.
1974 ஆண்டு கச்சத்திவு இலங்கைக்கு தாரைவாக்கப்பட்ட பின்னரும் இதேநிலை தொடர்ந்தது . 1983 இலங்கை உள்நாட்டில் போரின் அடிப்படையில் சில காலம் கச்சதீவு அந்தோணியார் கோவில் திருவிழா தடைப்பட்டது. ஆனாலும் பாரம்பரிய மீனவர்கள் நாட்டுப்படகில் சென்று திருவிழா கொண்டாடி வந்தனர்.இந்த நிலையில் 2011 முதல் மீண்டும் இருநாட்டு அரசு உதவிகளோடு கச்சத்திவு திருவிழா இலங்கை யாழ்ப்பாணம் கத்தோலிக்க மறை மாவட்டத்தால் முன்னெடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் முறையாக இராமேஸ்வரம் கத்தோலிக்க பாதிரியாருக்கு வரும் திருவிழா அழைப்பின் பேரில், மத்திய-மாநில அரசுகளின் ஒத்துழைப்பின் பேரில் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகில் திருப்பயணிகள் கச்சத்திவு திருவிழாவுக்கு சென்று வந்தனர்.இந்த நிலையில் 2012ம் ஆண்டு முதல் கச்சதீவு திருவிழாவை வணிகரீதியாக நடத்தும் நோக்கத்தில், அதிக கட்டணம் வசூலித்து விசைப்படகில் கச்சத்திவு திருவிழாவிற்கு திருப்பணிகளை அழைத்துச் சென்றனர். இதனால் தீவு பாரம்பரிய மீனவர்களால் கச்சதீவு திருவிழாவிற்கு அதிக கட்டணம் கொடுத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.இதற்கு பாரம்பரிய மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேசமயம் பாரம்பரிய மீனவர்கள் தங்கள் நாட்டுப்படகில் கட்டணம் இல்லாமல் புனித அந்தோணியாருக்கு நேர்த்திக்கடனாக திருப்பயணிகளை கச்சத்தீவு திருவிழாவிற்கு அழைத்துச் சென்றனர். இதனால் வணிக ரீதியான கச்சத்தீவு திருவிழாவை நடத்த திட்டமிட்டவர்களுக்கு, கச்சதீவு பாரம்பரிய நாட்டுப்படகு திருப்பயணம் இடையூறாக இருந்தது. இதன் அடிப்படையில் சிலர் தங்கள் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, அரசிடம் பல்வேறு காரணங்களை சொல்லி பாரம்பரிய கச்சதீவு நாட்டுப்படகு திருபயணத்தை 2013 ஆண்டு முதல் தடை செய்தனர்.
கச்சதீவு திருவிழா என்பது ஆன்மீக வழிபாடு மட்டுமல்ல, இருநாட்டு நட்புறவை பேணும் நிகழ்ச்சி. இருநாட்டு பாரம்பரிய மீனவர்கள்களும் புனித அந்தோணியார் ஆலயம் முன்பு அன்பு அமர்ந்து தங்களுக்குள்ள பிரச்சனைகளை சுமுகமாக பேசி தீர்த்து வந்தனர். இதன் அடிப்படையில் தான் 1974 ஒப்பந்தத்தில் கச்சதீவு திருவிழாவின் முக்கியத்துவத்தை உணர்த்து, இந்த திருவிழாவிற்காக 5வது சரத்தை சேர்த்துள்ளனர்.ஆனால் 1974 ஒப்பந்த அடிப்படையிலும், பாரம்பரிய ஆன்மீக உரிமை அடிப்படையில் கச்சதீவு திருவிழாவிற்கு பாரம்பரிய மீனவர்கள் நாட்டுப்படகில் செல்ல முடியாத நிலை 2013 முதல் ஏற்பட்டது. இதை எதிர்த்து பாரம்பரிய மீனவர்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர். அரசு செவி சாய்க்கவில்லை. மாறாக போராடிய பாரம்பரிய மீனவர்கள் மீது கைது நடவடிக்கை மற்றும் வழக்குகளை போட்டு முடக்க நினைத்தது.2018 ஆம் ஆண்டு மதுரை உயர்நீதிமன்றத்தை நாடி கச்சதீவு பாரம்பரிய நாட்டுப்படகு திருப்பயணத்திற்கான உரிமையை மீனவர்கள் பெற்றார்கள். உயர்நீதிமன்ற ஆணை 3258/2018 அடிப்படையில் கச்சத்தீவு பாரம்பரிய திருபயண குழு சார்பாக 2019 ஆண்டு முதல் பாரம்பரிய மீனவர்கள் நாட்டுப்படகில் தங்கள் குடும்பங்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களுடன் கச்சத்திவு திருப்பயணம் சென்று வருகிறார்கள்.சென்ற 2024 ஆண்டு விசைப்படகு மீனவர்கள் சில காரணங்களை கூறி கச்சதீவு திருவிழாவை புறக்கணித்தனர். இதனால் கச்சதீவு திருப்பயினும் சொல்ல முடியாமல் திருப்பயணிகள் மன உளைச்சலுக்கு ஆளானார்கள். திருப்பயினத்திற்கு பணம் கொடுத்து பல பேர் ஏமாந்து போனார்கள். புனித அந்தோணியாருக்கு நேர்த்திக்கடன் செலுத்து வந்த பக்தர்கள் மனம் உடைந்து போனார்கள்.ஆனாலும் பாரம்பரிய மீனவர்கள் தங்கள் உரிமையை நிலைநாட்ட கச்சதீவு திருவிழாவிற்கு 16 நாட்டுப்படகில் 300 பேர் செல்வது என கடைசி வரை முயன்றனர். ஆனால் தமிழக அரசு மீன்வளத்துறை, காவல்துறை மற்றும் வருவாய்த்துறையை பயன்படுத்தி பாரம்பரிய கச்சத்திவு நாட்டுப்படகு திருப்பயணம் செல்வதை அரசு தடுத்தது.
இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கக்கூடாது என்பதை முன்கூட்டியே நீதிமன்றத்தில் தெரிவித்ததன் அடிப்படையில், மதுரை உயர்நீதிமன்றம் தனது 3258/2018 உத்தரவில் கச்சதீவு திருவிழாவிற்கு கட்டணம் வசூலித்து திருப்பயணிகளை மீன்பிடி விசைப்படகில் அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளது. அதேசமயம் ஒரு ஆண்டுகளில் கச்சதீவு திருவிழாவில் பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க கச்சதீவுக்கு செல்லும் திருப்பயணிகளை பயணிகள் கப்பலில் அரசு அழைத்துச் செல்ல வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து ஒவ்வொரு வருடமும் அரசுக்கு தெரியப்படுத்தியும் அரசு இதுவரை உயர்நீதிமன்ற ஆணையை முழுமையாக செயல்படுத்தவில்லை.
சென்ற ஆண்டு விசைப்படகு மீனவர்கள் கச்சதீவு புறக்கணிப்புக்கு சொன்ன காரணங்கள், இந்த ஆண்டும் உயிர்ப்பில் உள்ளது. எனவே கடந்த ஆண்டு போல் இந்த ஆண்டும் கச்சத்திவு திருவிழாவை புறக்கணிக்கும் திட்டம் விசைப்படகு மீனவர்களிடையே உள்ளது.
எனவே இந்த ஆண்டு கச்சதீவு திருவிழா திருப்பயணம் தடைப்படாமல் இருக்க உயர் நீதிமன்றம் உத்தரவுகளை உரிய முறையில் தமிழக செயல்படுத்த வேண்டும். கச்சதீவு திருவிழாவிற்கு கட்டணம் வசூலித்து மீன்பிடி விசைப்படகில் அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும்.உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நாகப்பட்டினம் போன்ற இடங்களில் பயன்பாட்டில் உள்ள பயணிகள் கப்பலை அரசு வாடகைக்கு அமர்த்தி கச்சதீவு திருவிழாவுக்கு செல்லும் திருப்பயணிகளை அழைத்துச் செல்ல வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை





