“எம்எல்ஏக்களுக்கு அரசு கார்; ஒரு உதவியாளர்: பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு

சென்னை:
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் கடந்த 12-ம் தேதி பேசிய விசிக எம்எல்ஏ ஜோதிமணி, பொருளாதார வசதி இல்லாததால் என்னிடம் கார் இல்லை. அதனால் என்னுடைய தொகுதி முழுவதும் சென்று ஆய்வு செய்ய முடியவில்லை. வாடகைக்கு வாகனம் எடுத்தே செல்ல வேண்டியதாக உள்ளது. என்னைப்போல பல சட்டப்பேரவை உறுப்பினர்களின் நிலையும் இப்படித்தான் இருக்கின்றது. அரசு இதனை கவனத்தில் கொண்டு கார் மற்றும் உதவியாளர் வழங்க வேண்டும் என்று சட்டப்பேரவைத் தலைவரிடம் கோரிக்கையை முன்வைத்தார்.
அப்போது சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், “முதல்வரின் கரங்கள் கிள்ளிக் கொடுக்கும் கரங்கள் அல்ல, அள்ளிக் கொடுக்கும் கரங்கள். இதனை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை இன்று (ஆக.19) கூடியதும், விசிக எம்எல்ஏ ஜோதிமணியின் கோரிக்கையை ஏற்று, விதி எண் 110-ன் கீழ் தமிழக முதல்வர் வெளியிட்ட அறிவிப்பில், எளிய பின்னணியைக் கொண்டவர்கள் எம்எல்ஏக்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அவர்கள் மக்கள் பணியை தடையின்றி செய்திட ஏதுவாக அனைத்து எம்எல்ஏக்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும். வாகனத்துக்கு எரிபொருள், ஓட்டுநர் உள்ளிட்ட பராமரிப்புச் செலவுகளுக்காக மாதந்தோறும் ரூ.75 ஆயிரம் வழங்கப்படும். எம்எல்ஏக்கள் தங்களுக்கு உதவியாளரை நியமித்துக் கொள்ள ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.
முதல்வரின் இந்த அறிவிப்பை விசிக எம்எல்ஏ ஜோதிமணி உள்பட உறுப்பினர்கள் பலரும் வரவேற்றனர். பாமகவும் வரவேற்பு தெரிவித்தது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் முதன்மை மொழி; பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை:தமிழை சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மையான நீதிமன்ற மொழியாக அங்கீகரிக்க வேண்டுமென்றும், உயர்

புதிய அரசு பொறுப்பேறற 116 நாட்களில் 550 குற்றச் சம்பவங்கள்; குற்றவாளிகளாக நிற்கும் ஆளும் கட்சி நிர்வாகிகள் பட்டியலிட்ட உதயநிதி

சென்னை:சட்டபேரவையில் இன்று முதல்வர் விஜய் தலைமையில் கீழ் உள்ள காவல்துறை மானியக் கோரிக்கை

தமிழ்நாடு சுற்றுலா விருதுக்கு விண்ணப்பிக்க 30ம் தேதி கடைசிநாள்: சென்னை ஆட்சியர்

சென்னை:தமிழ்நாடு முதலமைச்சர் நல்வழிகாட்டுதலின்படி சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்காக பல்வேறு புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஏற்றுமதியில் 2-வது இடம்: இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த காஞ்சிபுரம்!

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சினேகா தலைமையில் மாவட்ட